Advertisement


சரிந்தது இந்திய பேட்டிங்: இங்கிலாந்து அணி வெற்றி

ஜூலை 14, 2018.
 Comments  
 


india, england, second odi cricket, london
 

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று லண்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், பேட்டிங் தேர்வு செய்தார்.

குல்தீப் நம்பிக்கை

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்நிலையில் குல்தீப்பை அழைத்தார் கேப்டன் கோஹ்லி. இதற்கு உடனடி பலனாக, இவரது 2வது பந்தில் பேர்ஸ்டோவ் (38) போல்டானார். சற்று தாக்குப்பிடித்த ஜேசன் ராய் (40), குல்தீப் சுழலில் சரிந்தார். ஜோ ரூட், ஒருநாள் அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த மார்கன், 38 வது அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த போது குல்தீப் சுழலில், மார்கன் (53) அவுட்டானார். ஸ்டோக்ஸ் (5) வந்த வேகத்தில் கிளம்பினார்.

ரூட் சதம்

பட்லர் (4), மொயீன் அலி (13) விரைவில் அவுட்டாக, அடுத்து வந்த வில்லே, இந்திய ரசிகர்களுக்கு வில்லனாக இருந்தார். சித்தார்த் வீசிய 46வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் ஜோ ரூட், சர்வதேச அளவில் 12வது, இந்தியாவுக்கு எதிராக முதல் சதம் எட்ட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியது. ஒருநாள் அரங்கில் முதல் அரைசதம் அடித்த வில்லே (50) கடைசி பந்தில் அவுட்டாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் (113) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சரிந்தது ‘டாப்’

கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த போது ரோகித் சர்மா (15) போல்டானார். தவான் (36), லோகேஷ் ராகுல் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். பின் கேப்டன் கோஹ்லி, ரெய்னா இணைந்தனர். இருவரும் அணியை மீட்க போராடினர். இந்நிலையில் கோஹ்லி 45, ரெய்னா 46 என அரை சத வாய்ப்பை இழந்தனர்.

பாண்ட்யா (21), உமேஷ் (0) ஏமாற்ற தோனி 37 ரன்கள் எடுத்தார். கவுல் (2), சகால் (12) ஏமாற்றினர்.  இந்திய அணி 50 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. குல்தீப் (8) அவுட்டாகாமல் இருந்தார்.

893

இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை தவான், ரோகித் (893 ரன்) பெற்றனர். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஹேல்ஸ் (879 ரன்) ஜோடி உள்ளது.

10,000

நேற்று 33 ரன்கள் எடுத்த தோனி ஒருநாள் அரங்கில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆனார்.

* சச்சின், கங்குலி, டிராவிட்டுக்கு அடுத்து நான்காவது இந்திய வீரர் ஆனார்.

* சர்வதேச அளவில் சங்ககராவுக்கு அடுத்து 2வது விக்கெட் கீப்பர், 12வது வீரர் ஆனார்.

* தில்ஷன், லாராவுக்கு அடுத்த அதிக வயதில் (37 வயது, 7 நாள்) இந்த இலக்கை எட்டிய வீரர் ஆனார் தோனி.

* ஜெயசூர்யாவுக்கு (11,303) அடுத்து, குறைந்த பந்துகளில் 10,000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி (11,321 பந்து)

893

இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை தவான், ரோகித் (893 ரன்) பெற்றனர். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஹேல்ஸ் (879 ரன்) ஜோடி உள்ளது. 

தோனி ‘300’

நேற்று உமேஷ் ஓவரில் பட்லர் அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்தார் இந்தியாவின் தோனி. இது ஒருநாள் அரங்கில் இவரது 300வது (319 போட்டி) ‘கேட்ச்’ ஆக அமைந்தது. தவிர இந்த இலக்கை எட்டிய முதல் இந்தியர், உலகளவில் நான்காவது விக்கெட் கீப்பர் ஆனார் தோனி. 

முதல் மூன்று இடங்களில் கில்கிறிஸ்ட் (417 ‘கேட்ச்’, 282 போட்டி, ஆஸி.,), பவுச்சர் (294ல் 402, தெ.ஆப்.,), சங்ககரா (360ல் 383, இலங்கை) உள்ளனர்.

11

ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி 19வது முறையாக இங்கிலாந்து அணிக்கு துவக்கம் தந்தது. இதில் 11வது முறையாக 50க்கும் மேல் ரன்கள் சேர்த்தது.

ஜூலை 14

உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 2019 மே 30ல் இங்கிலாந்தில் துவங்குகிறது. பைனல் ஜூலை 14ல் நடக்கிறது. சரியாக ஒரு ஆண்டு உள்ள நிலையில் நேற்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் இம்மைதானத்தில் மோதின. அடுத்த ஆண்டு இது மீண்டும் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?