Advertisement


தொடரை கைப்பற்றுமா இந்தியா

ஜூலை 13, 2018.
 Comments  
 


rohit
 

லண்டன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2–0 என, ஒருநாள் தொடரை கைப்பற்றலாம்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 1–0 என முன்னிலை வகிக்கிறது. இன்று, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடக்கவுள்ளது. 

ரோகித் நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’, முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட ரோகித் சர்மாவின் ‘பார்ம்’ இன்றும் தொடரலாம். இவருக்கு ஷிகர் தவான் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், மீண்டும் நல்ல துவக்கம் கிடைக்கும். ‘டுவென்டி–20’ தொடரில் பெரிய அளவில் சோபிக்காத கேப்டன் விராத் கோஹ்லி, அரைசதம் கடந்து எழுச்சி கண்டிருப்பது பலம். ‘மிடில்–ஆர்டரில்’ லோகேஷ் ராகுல், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா  அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

குல்தீப் பலம்

முதல் போட்டியில் ‘வேகத்தில்’ ஏமாற்றிய உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் அதிக ரன் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விளையாடுவது சந்தேகம்.  கடந்த போட்டியில் ‘சுழலில்’ அசத்திய ‘சைனாமேன்’ பவுலர் குல்தீப் யாதவ் 6 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார். இவரது ‘சுழல் ஜாலம்‘ இன்றும் தொடர்ந்தால் இங்கிலாந்து அணிக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு, மற்றொரு சுழல் வீரர் யுவேந்திர சகால் ஒத்துழைப்பு தந்தால் நல்லது. 

ஹேல்ஸ் விலகல்

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் காயத்தால் ஒருநாள் தொடரில் இருந்து விலகியது பின்னடைவு. ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல துவக்கம் தர வேண்டும். ‘டாப்–ஆர்டரில்’ ஜோ ரூட், கேப்டன் இயான் மார்கன் எழுச்சி கண்டால் நல்லது. முதல் போட்டியில் அரைசதமடித்து ஆறுதல் தந்த பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் ‘மிடில் ஆர்டரில்’ கைகொடுக்கலாம்.‘வேகத்தில்’ மார்க் உட், டேவிட் வில்லே, பிளங்கட், ஸ்டோக்ஸ் துல்லியமாக பந்துவீச வேண்டும். சுழற்பந்துவீச்சாளர்களான மொயீன் அலி, அடில் ரஷித் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இம்மைதானத்தில்...

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 6 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 (2002ல் 2, 2004), இங்கிலாந்து 2ல் (1975, 2007) வெற்றி பெற்றன. ஒரு போட்டி (2011) ‘டை’ ஆனது.

* கடந்த 1983ல் இங்கு விளையாடிய உலக கோப்பை பைனலில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

10

கடந்த 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. அதன்பின் விளையாடிய 9 ஒருநாள் தொடர்களை (இரு அணிகள் மட்டும் பங்கேற்கும்‘பைலேட்ரல் சீரிஸ்’) இந்திய அணி தொடர்ச்சியாக வென்றுள்ளது. இன்று இங்கிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 10வது ஒருநாள் தொடராக அமையும்.

மழை வருமா

இன்று போட்டி நடக்கவுள்ள லண்டனில், வெப்பநிலை அதிகபட்சம் 27, குறைந்தபட்சம் 16 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர 20 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?