Advertisement


மூன்றாவது இடம் யாருக்கு: இங்கிலாந்து–பெல்ஜியம் பலப்பரீட்சை

ஜூலை 13, 2018.
 Comments  
 


england  team
 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள 3வது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ரூ. 162 கோடி பரிசுத் தொகையை தட்டிச் செல்லலாம்.

ரஷ்யாவில் நடக்கும் 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பைனலுக்கு பிரான்ஸ், குரோஷியா அணிகள் முன்னேறிவிட்டன. இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இன்று நடக்கவுள்ள 3வது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வியடைந்த உலகின் ‘நம்பர்–3’ பெல்ஜியம் அணி, 12வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

லுகாகு நம்பிக்கை

‘ஜி’ பிரிவு லீக் சுற்றில் பனாமா, துனிசியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு சென்ற பெல்ஜியம் அணி, ‘ரவுண்டு–16‘ போட்டியில் ஜப்பான் அணியை வென்றது. பின் காலிறுதியில் பிரேசிலை தோற்கடித்த பெல்ஜியம், அரையிறுதியில் பிரான்சிடம் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை இழந்தது.கடந்த போட்டிகளில் கோலடித்த லுகாகு (4), கேப்டன் ஈடன் ஹசார்டு (2), கெவின் டி புரூய்னி (1), மெர்டன்ஸ் (1) உள்ளிட்டோர் மீண்டும் கைகொடுக்கலாம். இரண்டு ‘எல்லோ கார்டு’ தடை காரணமாக அரையிறுதியில் விளையாடாத தாமஸ் மியுனியர் இன்று களமிறங்கினால் பெல்ஜியத்தின் தற்காப்பு பலமடையும். கடந்த 1986ல் மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் அணி, பிரான்சிடம் தோல்வியடைந்து 4வது இடம் பிடித்தது. இன்று பெல்ஜியம் அணியினர் ஆதிக்கம் செலுத்தினால் முதன்முறையாக 3வது இடம் பிடிக்கலாம்.

கேன் எதிர்பார்ப்பு

‘ஜி’ பிரிவில் துனிசியா, பனாமா அணிகளை வீழ்த்திய இங்கிலாந்து அணி, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. பின் ‘ரவுண்டு–16’ போட்டியில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் கொலம்பியாவை வீழ்த்திய இங்கிலாந்து, காலிறுதியில் சுவீடனை வென்றது. குரோஷியாவுக்கு எதிராக அரையிறுதியில் ஏமாற்றிய இங்கிலாந்து அணி, பைனலுக்கு தகுதி பெறத் தவறியது.இத்தொடரில் அதிக கோலடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கேப்டன் ஹாரி கேன் (6), அரையிறுதியில் ஒரு கோல் கூட அடிக்காதது இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது. இன்று இவர் எழுச்சி கண்டு கோலடித்தால், ‘கோல்டன் ஷூ’ விருதை கைப்பற்றலாம். ஜான் ஸ்டோன்ஸ் (2 கோல்), டெலி அலி (1), லிங்கார்டு (1), ஹாரி மகுய்ரே (1), டிரிப்பியர் (1) உள்ளிட்ட மற்றவர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெற்று 3வது இடம் பிடிக்கலாம். கடந்த 1990ல் இத்தாலியில் நடந்த உலக கோப்பை தொடரில் 3வது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணி, இத்தாலியிடம் வீழ்ந்து 4வது இடம் பிடித்தது. இன்று இங்கிலாந்து அணியினர் எழுச்சி கண்டால் முதன்முறையாக 3வது இடத்தை கைப்பற்றலாம்.

பரிசு எவ்வளவு

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 162 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 148 கோடி பரிசு கிடைக்கும்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?