Advertisement


முகமது கைப் ஓய்வு

ஜூலை 13, 2018.
 Comments  
 


Mohammad Kaif
 

புதுடில்லி: கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது கைப்.

இந்திய அணிக்காக 13 டெஸ்ட் (624 ரன்), 125 ஒரு நாள் (2753) போட்டிகளில் விளையாடியவர் முகமது கைப், 37. 

கடந்த 2002 ஜூலை 13ல் நடந்த நாட்வெஸ்ட் ஒரு நாள் தொடரின் பைனலில் (லண்டன்) இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், ‘சேஸ்’ செய்த இந்திய அணிக்கு கைப் 87 ரன் விளாசி கோப்பை வெல்ல கைகொடுத்திருந்தார். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான அணியில் சிறந்த ‘பீல்டராக’ ஜொலித்தார். பின் வரிசையில் களமிறங்கிய கைகொடுப்பதில்  வல்லவர். கடைசியாக, தேசிய அணிக்காக தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடந்த (நவ. 29, 2006) ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார். இதன்பின் 12 ஆண்டாக இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. ஆனால், உ.,பி., அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி பட்டம் வென்று தந்தார். சட்டீஸ்கர் அணி சார்பிலும் உள்ளூர் போட்டியில் விளையாடி வந்தார்.  ஒட்டு மொத்தமாக 186 முதல் தர கிரிக்கெட்டில் 10,229 ரன் குவித்துள்ளார். போட்டியின்போது, சில நேரங்களில் இந்தி வர்ணனையிலும் ஈடுபட்டுள்ளார். நேற்று, அனைத்துவிதமான போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

16 ஆண்டு

இது குறித்து கைப் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ கடந்த 2002ல் இதே நாளில் (ஜூலை 13) நாட்வெஸ்ட் தொடரில் கோப்பை வெல்ல கைகொடுத்தேன். இந்த நிகழ்வு நடந்து 16 ஆண்டு ஆகிவிட்டன. இத்துடன், அனைத்துவிதமான போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். 

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் கிரிக்கெட்டிற்கு வந்தேன். இந்த இலக்கை எட்ட உதவிய அனைவருக்கும் நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?