Advertisement


‘வெண்கல’ நாயகர்கள் வருகை

ஜூலை 13, 2018.
 Comments  
 


croatia team
 

குரோஷியா பைனலுக்கு முன்னேறியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் சிறந்த செயல்பாட்டை எட்டி உள்ளது. இதற்கு முன், அதிகபட்சமாக 1998ல் பிரான்சில் நடந்த தொடரில் 3வது இடத்துடன் வெண்கலம் (எதிர்– நெதர்லாந்து) வென்றிருந்தது. நாளை நடக்கவுள்ள பைனலில் பிரான்ஸ் அணியை எதிர் கொள்கிறது. இப்போட்டியை பார்க்க, வெண்கலம் வென்ற குரோஷியா முன்னாள் வீரர்கள் மாஸ்கோவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகை, இன்றைய தலைமுறையினருக்கு ஊக்கம் தருவதாக அமையும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உஷார் நிலையில் பிரான்ஸ்

நாளை நடக்கவுள்ள பைனலில் குரோஷியா – பிரான்ஸ் அணிகள் மோதுகிறது. பிரான்ஸ் பட்டம் வென்றால் அந்நாட்டு தலைநகர் பாரிசில் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீற வாய்ப்புள்ளதாக போலீஸ் கருதுகிறது. இந்த கூட்டத்திற்குள் புகுந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என பிரான்ஸ் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பைனல் நடக்கும் நாளில் ஆயிரக்கணக்கான போலீசாரை பாரிசில் உள்ள தெருக்களில் நிறுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. 

தேர்வில் ‘ஆல் பாஸ்’

‘பிபா’ சார்பில் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்படுகிறது. இம்முறையும் அனைத்து போட்டிகளிலும் இது கடைபிடிக்கப்பட்டது.  போட்டி முடிந்தபிறகு மற்றும் போட்டி இல்லாத நாட்களில் என இரண்டு விதமாக சோதனை நடந்தது. ஒட்டு மொத்தமாக, 1500க்கும் மேற்பட்ட வீரர்களிடம் சோதனை செய்யப்பட்டது. பெறப்பட்ட மாதிரிகள், உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் சோதிக்கப்பட்டன. எல்லா வீரர்களும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர். இதை, ‘பிபா’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படியும் மோசடி

போட்டிகளை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு ‘விசா’ வேண்டாம் என ரஷ்யா அறிவித்தது. இணையதளத்தில் ‘டிக்கெட்’ பெறுபவர்களுக்கு ‘பேன் ஐடி’ என்ற ‘பிளாஸ்டிக் கார்டு’ தரப்பட்டது. இதை வைத்து, ரஷ்யாவில் தங்கி போட்டியை காணலாம். தற்போது, இதிலும் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து நைஜீரியாவின் சாதிக் கூறுகையில், ‘‘ரஷ்யாவில் தங்கி பணி புரிவதற்கான ‘ஐடி’ வாங்கித்தருகிறோம் என கூறி ரஷ்யா அழைத்து வந்தனர். இதற்காக, என்னிடமும் மற்றும் சகோதரிடமும் தலா ரூ. 48 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். ரஷ்யா வந்தபின்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம்,’’ என்றார்.

 

 

 

 

 

 

 

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?