Advertisement


தென் ஆப்ரிக்க அணி தோல்வி

ஜூலை 13, 2018.
 Comments  
 


Gale Test Cricket, South Africa, Sri Lanka
 

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏமாற்றிய தென் ஆப்ரிக்க அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 287, தென் ஆப்ரிக்கா 126 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூஸ் (14), ரோஷன் சில்வா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

மாத்யூஸ் ஆறுதல்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் ரோஷன் சில்வா (13) ‘ரன்–அவுட்’ ஆனார். கேஷவ் மகராஜ் ‘சுழலில்’ மாத்யூஸ் (35) சிக்கினார். ரபாடா ‘வேகத்தில்’ டிக்வெல்லா (9), தில்ருவான் பெரேரா (2) ஆட்டமிழந்தனர். ஹெராத் (0) ஏமாற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 190 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. கேப்டன் சுரங்கா லக்மல் (33) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் மகராஜ் 4, ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பெரேரா அசத்தல்: பின், 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, இலங்கை ‘சுழலில்’ சிக்கியது. தில்ருவான் பெரேரா பந்தில் டீன் எல்கர் (4), ஆம்லா (0), பாவுமா (2), குயின்டன் டி காக் (10), கேஷவ் மகராஜ் (9), ரபாடா (0) அவுட்டாகினர். ஹெராத் பந்தில் மார்க்ரம் (19), கேப்டன் டுபிளசி (1), ஸ்டைன் (2) வெளியேறினர்.

இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 73 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. பிலாண்டர் (22) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தில்ருவான் பெரேரா 6, ஹெராத் 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலங்கை அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 20ல் கொழும்புவில் துவங்குகிறது.

73 ரன்

இலங்கையிடம் 73 ரன்னில் சுருண்ட தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட் வரலாற்றில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், கடந்த 2015ல் நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 79 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது தென் ஆப்ரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

421 விக்கெட்

இரண்டாவது இன்னிங்சில் இலங்கையின் சண்டகனை அவுட்டாக்கிய ஸ்டைன், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய தென் ஆப்ரிக்க பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை ஷான் போலக்குடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா  421 விக்கெட் சாய்த்துள்ளனர். ஸ்டைன் 87, போலக் 108 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டினர்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?