Advertisement


ஹிமா தாஸ் புதிய வரலாறு

ஜூலை 13, 2018.
 Comments [3]  
 


world U 20 champ Hima Das is sprinting towards bigger glory GOLD
 

டாம்பியர்: உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் ஹிமா தாஸ். 400 மீ., ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.

பின்லாந்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதன் பெண்கள் 400 மீ., ஓட்டத்தில் களமிறங்கினார் இந்தியாவின் ஹிமா தாஸ், 18. துவக்கத்தில் சற்று தாமதமாக வரும் இவர், கடைசி 50 மீ., துாரத்தை மின்னல் வேகத்தில் கடப்பார். இதுபோன்று மீண்டும் மிரட்டிய ஹிமா தாஸ், இம்முறை கடைசி 80 மீ., துாரத்தில் மூன்று பேரை பின்னுக்குத் தள்ளி, பந்தய துாரத்தை 51.46 வினாடி நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது இவரது சிறந்த ஓட்டத்தை (53.13 வினாடி) விட குறைவு தான்.

இருப்பினும் உலக அளவிலான தடகள (‘டிராக்’) போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் ஹிமா தாஸ். இதற்கு முன் சீமா அன்டில் (வட்டு எறிதல், வெண்கலம், 2002), நவ்ஜீத் கவுர் தில்லான் (வட்டு எறிதல், வெண்கலம், 2014), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், தங்கம், 2016) என ‘பீல்டு’ பிரிவில் தான் சாதித்தனர். முதன் முறையாக ஹிமா தாஸ் ‘டிராக்’ (தடகளம்) பிரிவில் தங்கம் வென்றார்.

கால்பந்து வீராங்கனை

அசாமின் நாகோவான் மாவட்டத்தின் திங் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹிமா தாஸ். ஆரம்பத்தில் கால்பந்து வீராங்கனையாக இருந்தார். 

பின்  ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கி பைனலுக்கு முன்னேறினார். அடுத்து பயிற்சியாளர்கள் நிபுன் தாஸ், நபாஜித் இணைந்து ஹிமா தாசிற்கு உதவ, பள்ளி அளவிலான போட்டிகளில் 100 மீ.,ல் வெண்கலம், 200 மீ.,ல் வெள்ளி கைப்பற்றினார். தற்போது முதன் முறையாக களமிறங்கிய 400 மீ., ஓட்டத்தில் சாதித்துள்ளார்.

வாழ்த்து மழை

தடகளத்தில் (‘டிராக்’) இந்தியா வென்ற முதல் தங்கம் இது. இதனால் அசாம், இந்தியாவுக்கு பெருமை. அடுத்து ஒலிம்பிக்கிலும் சாதிக்க வாழ்த்துகிறேன்.

– ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

உலக தடகள 400 மீ., (20 வயது) ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹிமா தாசை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இது இளம் நட்சத்திரங்களுக்கு துாண்டுகோலாக அமையும்.

– பிரதமர் மோடி

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வியக்கத்தக்க சாதனை படைத்த உங்களை இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

– பி.டி.உஷா, தடகளம்

இது சும்மா துவக்கம் (‘டிரெய்லர்’) தான். கடினமான பயிற்சியை தொடர்ந்து, இன்னும் அதிக பதக்கங்கள் வெல்ல வாழ்த்துகிறேன்.

– சச்சின், கிரிக்கெட்

ஹிமா தாஸ் பதக்கம் வென்றது பெரிய விஷயம். அதை விட இந்தியாவினால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார். இவருக்கு தலை வணங்குவோம்.

– சுனில் செத்ரி, கால்பந்து

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
N.Arunkannan 5 days ago | Report abuse
இந்தியர்களின் சாதனை தொடரட்டும்....


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Gsanky 5 days ago | Report abuse
தலைப்பு செய்தியாக வரவேண்டியத


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Ramachandran. K 5 days ago | Report abuse
வாழ்த்துக்கள். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஒரு பதக்கம் பெற வாய்ப்பு உண்டு.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?