Advertisement


திண்டுக்கல் அணி ஏமாற்றம்

ஜூலை 11, 2018.
 Comments  
 


ashwin
 

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் திருநெல்வேலியில் நேற்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

அஷ்வின் அபாரம்

திண்டுக்கல் அணிக்கு ஜெகதீசன் (8) ஏமாற்றினார். ஹரி நிஷாந்த் (41), ரோகித் (46) நம்பிக்கை தந்தனர். அனிருத் (8), விவேக் ராஜ் (1), சதுர்வேத் (6) நிலைக்கவில்லை. லட்சுமி நாராயணன் வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய கேப்டன் அஷ்வின், கணபதி வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். இவர், 28 பந்தில் 42 ரன்கள் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அவுட்டானார்.

திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. முகமது (13), மோகன் அபினவ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சங்கர் ஆறுதல்

சவாலான இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு கேப்டன் பாபா இந்திரஜித் (14) சுமாரான துவக்கம் தந்தார். அஷ்வின் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த பரத் சங்கர் (39) ஓரளவு கைகொடுத்தார். அரவிந்த் (19) நிலைக்கவில்லை. கணபதி (5), மணி பாரதி (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

ஆதித்யா அருண் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சோனு யாதவ், ஆதித்யா வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சுரேஷ் குமார், 17வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது சோனு (30) வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. முகமது வீசிய இந்த ஓவரின் முதல் 4 பந்தில் 2 சிக்சர் உட்பட 14 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தை சிக்சராக அனுப்பிய சுரேஷ் வெற்றியை உறுதி செய்தார். திருச்சி அணி, 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் (45), சஞ்சய் (12) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் சார்பில் அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?