Advertisement


சிக்கினார் ஹர்மன்பிரீத்

ஜூலை 10, 2018.
 Comments [1]  
 


Harmanpreet
 

 சண்டிகர்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத், போலி சான்றிதழ் அளித்தது தெரியவந்ததால், டி.எஸ்.பி., பதவி பறிக்கப் பட்டது.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், 29. பஞ்சாப்பை சேர்ந்த இவர், ‘டுவென்டி–20’ அணி கேப்டனாக உள்ளார். மத்திய அரசின் அர்ஜுனா விருது வென்றவர். இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் (2017) இந்திய பெண்கள் அணி பைனல் வரை முன்னேறியது. இதில், ஹர்மன்பிரீத்தின் (8 போட்டி, 359 ரன்) செயல்பாட்டை பாராட்டி, பஞ்சாப் அரசு டி.எஸ்.பி., பணி அளித்து கவுரவித்தது.

போலி சான்றிதழ்

இதற்காக கான்ஸ்டபிளாக இருந்த ஹர்மன்பிரீத், பி.ஏ., இளங்கலை பட்டத்தை சமர்ப்பித்திருந்தார். தவிர, மத்திய அரசின் ரயில்வே துறை பணியிலிருந்தும் விலகினார். இதற்கிடையே, ஹர்மன்பிரீத்தின் கல்வி சான்றிதழ், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் (சி.சி.எஸ்.,) பல்கலைகழகத்திற்கு சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டது. இதில், இவரின் சான்றிதழ் எண் போலியானது என தெரியவந்துள்ளது. இவரின் டி.எஸ்.பி., பதவி பறிக்கப்பட்டது. 12ம் வகுப்பு தகுதிக்கேற்ப, கான்ஸ்டபிளாக தொடர்வார்.

அர்ஜுனா பறிபோகுமா

சி.சி.எஸ்., பல்கலை., விஜிலென்ஸ் பிரிவு பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில்,‘‘ ஹர்மன்பிரீத் 2011ல் பெற்றதாக பி.ஏ., பட்டத்திற்கான சான்றிதழை ஜலந்தர் போலீசாரிடம் அளித்துள்ளார். இதை சரிபார்த்தபோது, பல்கலை.,யின் பதிவேட்டில் இந்த எண் இல்லை என்பது தெரியவந்தது,’’ என்றார். ஹர்மன்பிரீத்தின் போலி சான்றிதழ் குறித்து எப்.ஐ.ஆர்., பதியப்பட்டால் அர்ஜுனா விருது பறிபோகலாம்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Raghubir Singh one week ago | Report abuse
She should be kicked out of police service the job for cheating the government. The job can be given to a deserving youngman or a woman




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?