Advertisement


தோனி, கோஹ்லி ‘10,000’

ஜூலை 10, 2018.
 Comments  
 


dhoni, kohli
 

நாட்டிங்காம்: இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் கேப்டன் கோஹ்லி அசத்தினால் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற வரலாறு படைக்கலாம். தோனியும் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்ட காத்திருக்கிறார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை நாட்டிங்காமில் நடக்கவுள்ளது. இந்திய கேப்டன் கோஹ்லி 208 ஒரு நாள் போட்டியில் 9588 ரன் எடுத்துள்ளார். இன்னும் 412 ரன் குவித்தால், 10 ஆயிரம் ரன் என்ற சாதனை எட்டலாம். தவிர, இந்த இலக்கை வேகமாக எட்டிய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினை (266 போட்டி) முந்தி முதலிடம் பிடிக்கலாம்.

தேவை 33 ரன்

இதைப்போல, 37 வயதான தோனிக்கு இன்னும் 33 ரன் எட்டினால், ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்னை குவிக்கலாம். தற்போது, 318 போட்டியில் 9967 ரன் சேர்த்துள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட்டிற்குப்பின் இந்த இலக்கை எட்டிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எட்டுவாரா 8 ஆயிரம்

‘மிடில்– ஆர்டர்’ பேட்ஸ்மேன் ரெய்னாவை பொறுத்தவரை, 18 டெஸ்ட் (768 ரன்), 223 ஒரு நாள் (5568), 78 ‘டுவென்டி–20’ (1605) போட்டியில் விளையாடி உள்ளார். இங்கிலாந்து தொடரில், 59 ரன் எடுத்தால், சர்வதேச அரங்கில் மூன்றுவிதமான போட்டியிலும் 8 ஆயிரம் ரன்களை குவிக்க முடியும். இதன் மூலம், இந்த இமாலய இலக்கை எட்டிப்பிடித்த 15வது இந்திய வீரராகலாம்.

புவனேஷ்வருக்கு வாய்ப்பு

வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் (86 போட்டி, 90 விக்.,) இன்னும் 10 விக்கெட் வீழ்த்தினால், ஒரு நாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய 19வது இந்தியர் என்ற சாதனை படைக்கலாம். ‘சுழல்’ வீரர் சகால் (23 போட்டி, 43 விக்.,) இன்னும் 7 விக்கெட் வீழ்த்தினால், ஒரு நாள் அரங்கில் 50 விக்கெட்டை அதிவேகமாக வீழ்த்திய இந்தியாவின் 2வது வீரராகலாம். முதலிடத்தில் அகார்கர் (23 போட்டி) உள்ளார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
Sinhalese Sports Club, Colombo

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?