Advertisement


நம்ம ஊரு...நம்ம ‘கெத்து’

ஜூலை 10, 2018.
 Comments  
 


murali vijay
 

சென்னை: தமிழக பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடரின் மூன்றாவது ‘சீசன்’ இன்று துவங்குகிறது.

கடந்த 2016ல் தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழக பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடர் (டி.என்.பி.எல்.,) துவங்கப்பட்டது. முதலிரண்டு தொடரில் முறையே துாத்துக்குடி (2016), சேப்பாக்கம் (2017) அணிகள் கோப்பை வென்றன. மூன்றாவது ‘சீசன்’ இன்று துவங்கி ஆகஸ்ட் 12 வரை நடக்கவுள்ளது. துாத்துக்குடி, சேப்பாக்கம், திண்டுக்கல், காரைக்குடி, கோவை, மதுரை, காஞ்சிபுரம், திருச்சி என மொத்தம் 8 அணிகள் களம் காண்கின்றன.

துாத்துக்குடி எப்படி

துாத்துக்குடி அணியை பொறுத்தவரை, கடந்த முறை பைனல் வரை முன்னேறியது. ‘ஆல்–ரவுண்டர்’ கேப்டன் வாஷிங்டன் சுந்தர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கவுசிக் காந்தி, அதிசயராஜ் டேவிட்சன் பங்களிப்பு கிடைத்தால் மீண்டும் பட்டம் வெல்லலாம்.

‘நடப்பு சாம்பியன்’ சேப்பாக்கம் அணிக்கு ‘ஆல்–ரவுண்டர்’ விஜய் சங்கர் அசத்த காத்திருக்கிறார். அணியை திறம்பட வழிநடத்த வேண்டிய பொறுப்பு இவருக்கு உள்ளது. திண்டுக்கல் அணியிலிருந்த ‘சுழல்’ வீரர் முருகன் அஷ்வின், இந்த ‘சீசனில்’ சேப்பாக்கம் அணியில் இணைந்துள்ளார்.

கார்த்திக் சந்தேகம்

இந்திய அணி கீப்பரான தினேஷ் கார்த்திக், காரைக்குடி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் (கோல்கட்டா, 2018) கேப்டனாக மிரட்டிய இவர், இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ளதால், இம்முறை விளையாடுவது சந்தேகம். 

33 நாட்கள்

‘சீனியர்’ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் (திண்டுக்கல்), முரளி விஜய் (திருச்சி) உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் காரணமாக இவர்கள் தொடரின் முதல் பாதியில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது. 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு, நடன மங்கை ஆட்டம் என 33 நாட்களும் தமிழக கிரிக்கெட் ரசிகர் க ளுக்கு விருந்து காத்திருக்கிறது.

‘ஸ்மார்ட் பேட்’

டி.என்.பி.எல்., தொடரில் ‘ஸ்பெக்டாகாம்’ என்ற தொழில்நுட்பம் அறிமுகம் ஆகிறது. ‘ஜாம்பவான்’ கும்ளேயின் நிறுவனம் வடிவமைத்தது. இதன் படி ‘சென்சார்’ கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை பேட்டில் ஒட்டி விடுவர். இந்த பேட்டில் வீரர்கள் விளையாடும் போது பந்து எந்த இடத்தில் பட்டது என்பதை துல்லியமாக காணலாம். தவிர  பேட்டிங் செய்யும் முறை, பலம், பலவீனங்களையும் அறியலாம்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?