Advertisement


வழி விடுங்க

ஜூலை 10, 2018.
 Comments  
 


soccer fans
 

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் ரோடுகளில் செல்வோர் அதிக பாதிப்பு அடைகின்றனர். சுவீடனுக்கு எதிராக வெற்றி பெற்ற போது இவர்கள், கண்ணில் படும் கார், பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். வேகமாக வந்த ஆம்புலன்சிற்கு கூட வழிவிட மறுத்தனர். ஒருசிலர் அதன் மீது ஏறி நடனம் ஆடினர். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இதற்கு நன்றி தெரிவித்த போலீசார்,‘ இனி எங்கள் முறை,’ என்று கூற, படத்தில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

நடிகர் டூ நடுவர்

உலக கோப்பை தொடரில் நடுவராக உள்ளார் நெஸ்டர் பிட்டானா. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர், 1997ல் ‘தி பர்ரி’ என்ற ஆக் ஷன் படத்தில் நடித்தார். ரஷ்யா, சவுதி அரேபிய அணிகள் மோதிய முதல் லீக் போட்டியில் நடுவராக களமிறங்கினார். ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிரியராகவும் உள்ளார்.

உருகுவே, பிரான்ஸ் மோதிய காலிறுதிக்கும் இவர் தான் நடுவர். வரும் 15ம் தேதி நடக்கும் பைனலில் நெஸ்டர், நடுவராக செயல்பட உள்ளார். இதற்கு முன் அர்ஜென்டினாவின் ஹொராசியோ, 2006, பைனலில் நடுவராக இருந்தார். அப்போது, எல்லைமீறிய பிரான்சின் ஜிடேனுக்கு ‘ரெட் கார்டு’ காட்டி வெளியேற்றினார்.

91க்கு 34 வீரர்கள் தான்

உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, இங்கிலாந்து அணிகளின் 91 வீரர்கள் மட்டும் ரஷ்யாவில் உள்ளனர். இவர்களில் 34 பேர் மட்டும் தான் கடந்த 2014 பிரேசில் உலக கோப்பை தொடரில் விளையாடிய அனுபவ நட்சத்திரங்கள். இதேபோல 2010ல் தென் ஆப்ரிக்க மண்ணில் பங்கேற்ற போட்டியில் விளையாடிய ஒரு வீரர் தான் தற்போது ரஷ்ய மண்ணில் உள்ளார். மற்றவர்கள் எல்லாம் புதுமுகங்கள் தான் அதிகபட்சம் பெல்ஜியத்தின் 15 வீரர்கள் (மொத்தம் 23) கடந்த தொடரில் விளையாடியுள்ளனர். அடுத்து குரோஷியாவின் 11 வீரர்கள், பிரான்சின் 6 பேர், இங்கிலாந்தின் 2 பேர் தான் பிரேசில் தொடரில் விளையாடினர்.

வருகிறார் அதிபர் புடின்

உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபிய அணிகள் மோதின. இதை நேரில் பார்த்து ரசித்த ரஷ்ய அதிபர் புடின், பிறகு எந்த போட்டிக்கும் மைதானம் வரவில்லை. இவர் வந்திருந்தால் காலிறுதியில் ரஷ்யா வென்றிருக்கும் என ரசிகர்கள் வெ ளிப்படையாக பேசி வருகின்றனர். இதனிடையே மாஸ்கோவில் நடக்கும் பைனலைக் காண நேரில் வருகிறார் புடின். இதை அதிபர் மாளிகை உறுதி செய்தது.

தாய்லாந்து சிறுவர்களுக்கு ‘சீருடை’

தாய்லாந்தில் குகையில் சிக்கிய கால்பந்து அணியின் 12 சிறுவர்கள், பயிற்சியாளர் நேற்று மீட்கப்பட்டனர். இதுகுறித்து இங்கிலாந்து வீரர் கைல் வாக்கர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ கால்பந்து சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி. எனது அணியின் ‘ஜெர்சிகளை’ அவர்களுக்கு அனுப்ப விரும்புகிறேன்,’ என, குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?