Advertisement


விம்பிள்டன்: கெர்பர் அசத்தல்

ஜூலை 10, 2018.
 Comments  
 


Jelena Ostapenko
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு லாட்வியாவின் ஆஸ்டபென்கோவா, ஜெர்மனியின் கெர்பர் உள்ளிட்டோர் முன்னேறினர்.

லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் 33வது இடத்திலுள்ள சுலோவாகியாவின் சிபுல்கோவா, லாட்வியாவின் ஆஸ்டபென்கோவா (12வது இடம்) சந்தித்தார். துவக்கம் முதலே அசத்திய ஆஸ்டபென்கோவா முதல் செட்டை 7–5 என வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6–4 என வென்றார். ஒரு மணி நேரம் 22 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஆஸ்டபென்கோவா 7–5, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

செரினா வெற்றி 

மற்றொரு காலிறுதியில் ஜெர்மனியின் கெர்பர், ரஷ்யாவின் டேரியா கசட்கினாவை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–3 என எளிதாக கைப்பற்றிய கெர்பர், இரண்டாவது செட்டையும் 7–5 என தனதாக்கினார். முடிவில், கெர்பர் 6–3, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஆஸ்டபென்கோவா– கெர்பர் மோத உள்ளனர்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் செரினா 3–6, 6–3, 6–4 என இத்தாலியின் கமிலா ஜியார்ஜியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

போட்ரோ போராட்டம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ, பிரான்சின் கில்ஸ் சிமோனுடன் மோதினார். 4வது இடத்திலுள்ள போட்ரோ எளிதில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 53வது இடத்திலுள்ள சிமோன் கடும் நெருக்கடி கொடுத்தார். இதில் 4 மணி நேரம் 24 நிமிடம் போராடிய போட்ரோ 7–6, 7–6, 5–7, 7–6 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?