Advertisement


ஜெயிக்குமா பெல்ஜியம்...ஜொலிக்குமா பிரான்ஸ்: உலக கால்பந்து அரையிறுதியில் மோதல்

ஜூலை 09, 2018.
 Comments [4]  
 


FIFA World Cup Soccer 2018, Semi Final, Belgium, France
 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் இன்று பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரீஸ்மன், மபே, போக்பா கூட்டணி மீண்டும் கைகொடுக்கும் பட்சத்தில், 12 ஆண்டுக்குப் பின் பிரான்ஸ் அணி பைனலுக்கு செல்லலாம். ‘ரெட் டெவில்ஸ்’ பெல்ஜியம் அணியின் துணிச்சல் ஆட்டம் தொடர்ந்தால், பைனல் கனவு நனவாகலாம்.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றுடன் நடையை கட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சியின் அர்ஜென்டினா, ரொனால்டோவின் போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் ‘ரவுண்டு–16’ சுற்றுடன் நாடு திரும்பின.

எஞ்சியிருந்த முன்னணி அணியான பிரேசிலின் கதை காலிறுதியில் முடிந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி, 7வது இடத்திலுள்ள பிரான்சை சந்திக்கிறது.

கேப்டன் அபாரம்: பிரான்ஸ் அணி 2006க்குப் மீண்டும் அரையிறுதிக்கு வந்துள்ளது. உலக கோப்பை தொடரில் கடந்த 5 போட்டிகளில் தோற்காமல் (4 வெற்றி, 1 ‘டிரா’) வலம் வருகிறது. 19 வயது இளம் வீரர் மபே (3 கோல்), மின்னல் வேகத்தில் பந்தை கொண்டு செல்வது, பெல்ஜியத்திற்கு கட்டாயம் சிக்கலைத் தரலாம்.

3 கோல் அடித்த கேப்டன் கிரீஸ்மானுடன், பவார்டு, ஆலிவர் கிரவுடு என பல நட்சத்திர வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் கோல் கீப்பர் ஹியுகோ லோரிசும் கை கொடுக்க காத்திருக்கிறார்.

யாருக்கு பலம்: ‘பெல்ஜியம் அணி நுாறு 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்கு வந்துள்ளது. 1986க்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்த அணி, இன்று உற்சாகமாக செயல்படலாம். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் வந்த பின் களமிறங்கிய 23 போட்டிகளில் தோற்காமல் வலம் வருகிறது.

இந்த உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த அணிகளில் முதலிடமும் பெல்ஜியத்துக்குத் (14) தான். ஜப்பான் அணிக்கு எதிராக 0–2 என பின்தங்கி இருந்த போது, பயிற்சியாளர் மாற்று வீரராக களமிறக்கிய இரு வீரர்களும் கோல் அடித்தனர்.

அதேநேரம் தற்காப்பு வீரர் தாமஸ் மியுனியர், தடை காரணமாக (இரண்டு ‘எல்லோ கார்டு) இன்று களமிறங்காதது பெரும் இழப்பு. இது கேப்டன் ஈடன் ஹஜார்டுக்கு சிக்கல் தரலாம். இருப்பினும் லுாகாகுவின் அசுர வேகம், கெவின் டி பிரியுனின்  தாக்குதல் ஆட்டம் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

இரண்டு அணிகள்

கால்பந்து தரவரிசையில் ‘டாப்–10’ இடத்தில் உள்ள அணிகளில் உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பெல்ஜியம், பிரான்ஸ் என 2 அணிகள் மட்டும் முன்னேறின. ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல, ஸ்பெயின் உள்ளிட்ட 8 அணிகள் நாடு திரும்பின.

ஐரோப்பா ஆதிக்கம்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் ஐந்தாவது முறையாக ஐரோப்பிய அணிகள் மட்டும் (இங்கிலாந்து, பெல்ஜியம், குரோஷியா, பிரான்ஸ்) பங்கேற்கின்றன. 2006க்குப் பின் இதுபோல நடப்பது இது தான் முதன் முறை.

மூன்று போட்டி

பெல்ஜியம் அணிக்கு எதிரான இரண்டு உலக கோப்பை தொடர் உட்பட முக்கிய தொடர்களில் கடைசியாக மோதிய மூன்று போட்டிகளிலும் பிரான்ஸ் வென்றுள்ளது.

ஒன்பது வீரர்கள்

பெல்ஜியம் அணியின் 9 வீரர்கள் இத்தொடரில் கோல் அடித்துள்ளனர். இதற்கு முன் பிரான்ஸ் (1982), இத்தாலி (2010) அணிகளில் சார்பில் 10 வீரர்கள் கோல் அடித்திருந்தனர்.

15 கோல்

உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன் அதிக கோல் அடித்த அணிகளில் பிரேசில் (2002ல் 15 கோல்) முதலிடத்தில் உள்ளது. இதில் பெல்ஜியம் இரண்டாவதாக (இம்முறை, 14 கோல்) உள்ளது.

17  கோல்

பெல்ஜியம் வீரர் லுாகாகு, கடைசியாக களமிறங்கிய 13 போட்டிகளில் 17 கோல் அடித்தார். சக வீரர்கள் கோல் அடிக்க 3 முறை உதவினார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
KUMARAPPA one week ago | Report abuse
பிரான்ஸ் நிச்சியம் வெற்றி பெரும் . இறுதி போட்டியில் இங்கிலாந்து விடம் தோற்று ரன்னர் ஆக தாயகம் செல்லும் பிரான்ஸ்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
sam one week ago | Report abuse
பிரான்ஸ் வின்ஸ


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Capri Ra one week ago | Report abuse
இந்த முறை பிரான்ஸ் தான் வேர்ல்டு கப் வெல்லும்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Arunagirinathan Perumal one week ago | Report abuse
இன்றைய ஆட்டம் இறுதிவரை முடிவினை சொல்ல முடியாது. இருந்தாலும் விளையாட்டு தொடங்கி எந்த அணி முற்பாதியில் இரண்டு கோல் போடுகிறதோ அந்த அணியே வெற்றியை தீர்மானிக்கும். அதே வேளையில் பெல்ஜியம் அணி மிகவும் வேகம் காட்டும் அணியாக இருப்பதால் கடைsi i விளையாட்டாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?