Advertisement


பிரேசில் வீரருக்கு கொலை மிரட்டல்

ஜூலை 09, 2018.
 Comments  
 


Brazil Soccer, Fernantino, Mandzukic, Croatia, FIFA World Cup 2018 Soccer
 

மாஸ்கோ: பெல்ஜியம் அணிக்கு எதிரான காலிறுதியில் ‘சேம் சைடு’ கோல் அடித்தவர் பிரேசில் வீரர் பெர்னான்டினோ. இதனால் இவரை, இனவெறியை துாண்டும் வகையில் ரசிகர்கள் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். மனைவி ரோசா கிளாசியாவுக்கு அனுப்பிய ‘இன்ஸ்டாகிராம்’ செய்தியில்,‘ உங்கள் கணவர் அனைத்தையும் வீணடித்து விட்டார்,’ என தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று மோசமான முறையில் செய்திகளை அனுப்புவதால், பெர்னான்டினோ அம்மா தனது ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கையை மூடி விட்டார்.


வழி விடுங்கப்பா

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் ரோடுகளில் செல்வோர் அதிக பாதிப்பு அடைகின்றனர். சுவீடனுக்கு எதிராக வெற்றி பெற்ற போது இவர்கள், கண்ணில் படும் கார், பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். வேகமாக வந்த ஆம்புலன்சிற்கு கூட வழிவிட மறுத்தனர். ஒருசில் அதன் மீது ஏறி நடனம் ஆடினர். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இதற்கு நன்றி தெரிவித்த போலீசார்,‘ இனி எங்கள் முறை,’ என்று கூற, படத்தில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

ரசிகளுக்காக... 

குரோஷியாவின் சிலவோன்ஸ்கி பிராட்டை சேர்ந்தவர் மாண்ட்ஜூகிச். இங்கு 63,000 பேர் வசிக்கின்றனர். இங்கிருந்து அருகிலுள்ள பகுதிக்கு சென்று, மாண்ட்ஜூகிச் ரசிகர்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர். காலிறுதியில் ரஷ்யாவுக்கு எதிராக மோதிய போட்டியின் போது, ரசிகர்களுக்கு இலவச பீர் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். இதற்காக ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுத்தார். இதனால் நாளை அரையிறுதி போட்டிக்கு என்ன தரப் போகிறார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘கழுகு’ கோல் கீப்பர்

ரஷ்ய கோல் கீப்பர் அகின்பீவ். உலக கோப்பை தொடரில் ரஷ்ய அணி காலிறுதி வரை முன்னேறியதற்கு இவர் தான் முக்கிய காரணம். ஸ்பெயின் அணிக்கு எதிரான ‘ரவுண்டு–16’ போட்டியில் ‘பெனால்டியை’ தடுத்த போது, ரஷ்ய மக்களின் ‘ஹீரோ’ ஆகிவிட்டார். இதனிடையே மாஸ்கோவில் உள்ள வன விலங்கு காட்சியகத்தில் புதிதாக பிறந்த கழுகுக்கு, அகின்பீவ் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இதன் இயக்குனர் ஸ்வெட்லானா கூறுகையில்,‘‘ எங்கள் கால்பந்து அணி காலிறுதி வரை சென்றதால் பெருமைப்படுகிறோம்,’’ என்றார்.

91க்கு 34 வீரர்கள் தான்

ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, இங்கிலாந்து என நான்கு அணிகள் முன்னேறின. இந்த அணிகளின் 91 வீரர்கள் மட்டும் தற்போது ரஷ்யாவில் உள்ளனர். 

இவர்களில் 34 பேர் மட்டும் தான் கடந்த 2014 பிரேசில் உலக கோப்பை தொடரில் விளையாடிய அனுபவ நட்சத்திரங்கள். இதேபோல 2010ல் தென் ஆப்ரிக்க மண்ணில் பங்கேற்ற போட்டியில் விளையாடிய ஒரு வீரர் தான் தற்போது ரஷ்ய மண்ணில் உள்ளார். மற்றவர்கள் எல்லாம் புதுமுகங்கள் தான்

அதிகபட்சம் பெல்ஜியத்தின் 15 வீரர்கள் (மொத்தம் 23) கடந்த தொடரில் விளையாடியுள்ளனர். அடுத்து குரோஷியாவின் 11 வீரர்கள், பிரான்சின் 6 பேர், இங்கிலாந்தின் 2 பேர் தான் பிரேசில் தொடரில் விளையாடினர்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?