Advertisement


இங்கிலாந்து சிறுவன் ஆசை நிறைவேறுமா

ஜூலை 09, 2018.
 Comments [1]  
 


Ben Williams, England Child, FIFA World Cup Soccer 2018, Harry Kane
 

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் பென் வில்லியம்ஸ். மூளை புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பர்மிங்காமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். நடக்க, பேச முடியாமல் அவதிப்பட்ட இவனுக்கு ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட, சற்று மீண்டுள்ளான்.

சமீபத்தில் தனக்கு உலக கோப்பை கால்பந்து வேண்டும் என கேட்டான். அங்குள்ள செவிலியர்கள் மாதிரி உலக கோப்பையை வில்லியம்சிடம் கொடுத்தனர். அப்போது,‘ இது என்ன தெரியுமா என்று கேட்க, இது தான் உலக கோப்பை,’ என்று உற்சாகமாக தெரிவித்தான்.

அப்போது வில்லியம்ஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த வீடியோ இணையளத்தில் வெளியானது. இதைப்பார்த்த இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் ஹாரி கேன் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி:

நாங்கள் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம், எப்படி விளையாடுகிறோம் என எல்லாம் மக்கள் மத்தியில் கவனமாக பார்க்கப்படும் என எங்களுக்குத் தெரியும். சிறுவன் வில்லியம்ஸ் செயல் எங்களை உத்வேகத்துடன் செயல்பட துாண்டுகிறது. அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று உண்மையான உலக கோப்பையை வென்று, அவனது முகத்தில் இன்னும் கூடுதல் உற்சாகத்தை கொண்டு வர முடியும் என நம்புகிறோம்.

இவ்வாறு ஹாரி கேன் தெரிவித்தார்.

சிறுவனுக்கு சிகிச்சை தரும் லியாம் ஹெர்பர்ட் கூறுகையில்,‘‘ ஒரு வாரத்துக்கு முன் உலக கோப்பை கேட்டதற்கு, நாங்கள் மாதிரியை கொடுத்து விட்டோம். இதுபோல, இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேனும் செய்வாரா,’’ என்றார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
KUMARAPPA one week ago | Report abuse
ஹாரி கேன் - நிச்சியம் நிறைவேற்றுவார்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?