Advertisement


விம்பிள்டன்: காலிறுதியில் பெடரர், செரினா

ஜூலை 09, 2018.
 Comments  
 


Wimbledon Tennis, Roger Federer, Kerber
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ‘நடப்பு சாம்பியன்’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் கெர்பர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் ‘நம்பர்–2’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் அட்ரியன் மனாரினோ மோதினர். முதல் செட்டை 6–0 என எளிதாக வென்ற பெடரர், 2வது செட்டை 7–5 என போராடி கைப்பற்றினார். பின் 3வது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 6–4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 45 நிமிடம் நீடித்த போட்டியில் பெடரர் 6–0, 7–5, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, அமெரிக்காவின் ஜான் இஸ்னர், கனடாவின் மிலோஸ் ராவோனிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

கெர்பர் வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஜெர்மனியின் கெர்பர், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் அபாரமாக ஆடிய கெர்பர் 6–3, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ், 6–3, 7–6 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை வீழ்த்தினார்.

மற்ற போட்டிகளில் ரஷ்யாவின் எகடரினா மகரோவா 3–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் காமிலாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். சுலோவாகியாவின் டொமினிகா சிபுல்கோவா 6–4, 6–1 என, சீனதைபேயின் சு–வெய்யை வீழ்த்தினார். லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 7–6, 6–0 என்ற நேர் செட் கணக்கில் பெலாரசின் சாஸ்னோவிச்சை தோற்கடித்தார். ஜெர்மனியின் ஜூலியா 6–3, 6–2 என, குரோஷியாவின் டோனா வேகிச்சை வீழ்த்தினார்.

செரினா வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் ரோடினா மோதினர். ஒரு மணி நேரம் 2 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய செரினா 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?