Advertisement


‘தனி ஒருவன்’ ரோகித் சர்மா: ஹர்திக் பாண்ட்யா புகழாரம்

ஜூலை 09, 2018.
 Comments  
 


Rohit Sharma, Hardik Pandya, India, Cricket, England T20 Series
 

பிரிஸ்டல்: ‘‘இங்கிலாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் தனி ஒருவனாக அசத்திய ரோகித் சர்மா இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்,’’ என, ஹர்திக் பாண்ட்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி பிரிஸ்டல் நகரில் நடந்தது. முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா சதமடித்து கைகொடுக்க, 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இதுகுறித்து இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். தனிநபராக சாதித்த இவர், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், கோப்பை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். இது எதிர்பார்த்த ஒன்று தான். இவரை போல வேறு யாரும் இப்படி பந்தை சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பியதை பார்த்ததில்லை.

முதலிரண்டு போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத இவர், பின் எழுச்சி கண்டு ரன் மழை பொழிந்தவிதம் சிறப்பானது. இது, அவரது தன்னம்பிக்கை வெளிப்படுத்தியது. ஒரு வீரர் மோசமாக விளையாடும் போது சகவீரர்கள், பயிற்சியாளர்கள் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் மிகப் பெரிய எழுச்சி காண்பார்கள் என்பதற்கு நல்ல உதாரணம்.

இப்போட்டியில் எனது முதல் ஓவரில் 22 ரன் எடுக்கப்பட்ட போதும் நெருக்கடியாக உணரவில்லை. இதனால் தான் அடுத்து வீசிய ஓவர்களில் ரன் வழங்கியதை கட்டுப்படுத்தி 4 விக்கெட் வீழ்த்த முடிந்தது. தேவையில்லாமல் ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கடியால் போட்டியில் சாதிக்க முடியாமல் போகலாம்.

ஒவ்வொரு போட்டியிலும் பாடம் கற்றுக் கொண்டு வருகிறேன். கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இளம் வயதில் விளையாடிய போது 3வது இடத்தில் களமிறங்கி உள்ளோன். இதனால் ‘பேட்டிங்’ வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்க தயாராக உள்ளேன். என்னைப் பொறுத்தவரை தனிநபர் சாதனையை விட அணியின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?