Advertisement


லோகேஷ் ராகுல் ‘நம்பர்–3’

ஜூலை 09, 2018.
 Comments  
 


Lokesh Rahul, ICC T20 Cricket, Ranking
 

துபாய்: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் முதன்முறையாக ‘நம்பர்–3’ இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 12வது இடத்தில் இருந்து முதன்முறையாக 3வது இடத்துக்கு முன்னேறினார். அயர்லாந்துக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டியில் 70 ரன் எடுத்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’யில் சதம் (101*) கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ சதமடித்து ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் ரோகித் சர்மா, 2 இடங்கள் முன்னேறி 11வது இடம் பிடித்தார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் யுவேந்திர சகால் 4வது இடத்தில் நீடிக்கிறார். 

இந்தியா ‘நம்பர்–2’

முத்தரப்பு பைனலில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரை இந்திய அணி 2–1 எனக்  கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி 124 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?