Advertisement


ஜெர்மனி வீரருக்கு எதிர்ப்பு

ஜூலை 08, 2018.
 Comments  
 


Mesut Ozil
 

உலக கோப்பை தொடரில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தில் விளையாடிய ஜெர்மனி, 3 போட்டியில் ஒரு வெற்றி (2 தோல்வி) மட்டுமே பெற்றதால், கடைசி இடம் பிடித்து லீக் சுற்றுடன் திரும்பியது. 29 வயதான அனுபவ மத்தியகள வீரரான ஓசில், 2 போட்டியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதற்கிடையே, துருக்கி வம்சாவளியை சேர்ந்த இவர் துருக்கி அதிபரை பிரிட்டனில் சந்தித்தார். இவர் இரட்டை குடியுரிமை பெற முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஓசில் தந்தை முஸ்தபா கூறுகையில்,‘‘ ஓசில் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவமானத்தை தருகிறது. வெற்றி கிடைத்தால், ஒன்றாக பகிர்ந்து கொள்கின்றனர். தோல்வி என்றால் ஓசிலை மட்டும் குறை கூறுகின்றனர். இவரது இடத்தில் நான் இருந்தால், ஜெர்மனி அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன்,’’ என்றார்.

‘லீவு’ முடிவு

உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு 1990க்குப்பின் முதல் முறையாக இங்கிலாந்து முன்னேறி உள்ளது. வரும் 11ம் தேதி புதன்கிழமை மாஸ்கோவில் நடக்கும் அரையிறுதியில் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர் கொள்கிறது. இதை ‘டிவியில்’ பார்ப்பதற்காக, இங்கிலாந்து ரசிகர்கள் அனைவரும் புதன் கிழமை பணிக்கு ‘லீவு’ எடுக்குமாறு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து ‘தி சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,‘28 ஆண்டுக்குப்பின் நமது அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அரையிறுதி போட்டியை பார்ப்பதற்காக இங்கிலாந்து ரசிகர்கள் புதன் கிழமை (ஜூலை 11) பணிக்கு ‘லீவு’ எடுத்து கொண்டாட வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் விலகல்

கடந்த 2010ல் உலக கோப்பை வென்ற அணி ஸ்பெயின். இம்முறை, ரஷ்ய மண்ணில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பங்கேற்றது. ‘ரவுண்டு–16’ சுற்றுப்போட்டியில் (எதிர்– ரஷ்யா) வீழ்ந்தது. இந்நிலையில், ஸ்பெயின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ஹியாரோ, 50, பதவியிலிருந்து விலகி உள்ளார். பெர்னாண்டோ கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடரில் அணியின் செயல்பாட்டிற்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறேன்,’’ என்றார்.

அதிபர்...பிரதமர்

ரஷ்யாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் குரோஷியா அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ வென்றது. இதை வி.ஐ.பி., பகுதியில், அமர்ந்து ரஷ்ய பிரதமர் டிமிட்ரிட் மெத்வதேவ், குரோஷியாவின் முதல் பெண் அதிபர் கொலின்டா கிராபர் பார்த்தனர். இதில் குரோஷியா வென்றதும் மகிழ்ச்சியில் திளைத்தார் கொலின்டா. கைகளை உயர்த்தி உற்சாகக்குரலில் ஆர்ப்பரித்தார். அருகில் அமர்ந்திருந்த மெத்வதேவ் விரக்தியில் இருந்தார். பின், தனது அணி வீரர்களுடன் கொலின்டா வெற்றியை கொண்டாடினார்.

 

 

 

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?