Advertisement


ஆஸி.,யை வென்றது பாக்.,

ஜூலை 08, 2018.
 Comments  
 


pakistan team
 

ஹராரே: பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி–20’ பைனலில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஜிம்பாப்வே மண்ணில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் நடந்தது. ஹராரேயில் நடந்த பைனலில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஷார்ட் (76) அரை சதம் அடித்தார். தன் பங்கிற்கு கேப்டன் பின்ச் 47 ரன் விளாசினார். ஆமிர் ‘வேகத்தில்’ மேக்ஸ்வெல் (5), ஹெட் (19) சிக்கினர். மற்றவர்களும் விரைவில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. 

வில்டர்மித் (1) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஜமான் அபாரம்

பாகிஸ்தான் அணிக்கு மேக்ஸ்வெல் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ சாகிப்ஜதா, ஹுசைன் டக்–அவுட்டாகினர். ஆனால், பர்கார் ஜமான் அபாரமாக விளையாடினார். ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய இவர் அரை சதம் கடந்தார். கேப்டன் சர்பராஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜமான் 91 ரன் எடுத்தார். சோயப் மாலிக் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோயப் (43), ஆசிப் அலி (17) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், பாகிஸ்தான் அணி கோப்பை வென்றது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?