Advertisement


புது ‘ஸ்டைல்’

ஜூலை 08, 2018.
 Comments  
 


southgate
 

இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் அணியும் ‘கோட்’ இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வருகிறது. இதன் விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

கிரிக்கெட் போட்டியின்போது, மைதானத்தின் அருகே பயிற்சியாளரை பார்க்க முடியாது. ‘டிரெசிங் ரூமில்’ உட்கார்ந்து கொண்டு, வீரர்களின் ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருப்பர். ஆனால், கால்பந்தில் இது தலைகீழாக இருக்கும். வீரர்களை ‘அப்படி...விளையாடு, இப்படி,’ என, உற்சாகப்படுத்துவது வழக்கம். இவர்கள் பெரும்பாலும், ‘கோட் சூட்’தான் அணிந்திருப்பார். ஆனால், இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கரேத் சவுத்கேட், சற்று வித்தியாசமாக நிற்கிறார்.

இளசுகள் விருப்பம்

‘பேன்ட்  சார்ட்’ அணிந்திருந்தாலும், இதற்கு மேலாக வேறு விதமான ‘கோட்’ போட்டிருப்பார். இங்கிலாந்து விளையாடும் போட்டியின்போது, இந்த தனித்துவமான ஆடையை ரசிகர்கள் காணலாம். 47 வயதான இவர் அணியும் இந்த ‘கோட்’ இளம் வயதினர் மத்தியில் பிரபலமாகி உள்ளது. 

கரேத் அணிந்துள்ள சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறம் கலந்த ‘டை’க்கு கூட தற்போது ‘டிமான்ட்’ அதிகமாகி உள்ளதாம்.

எவ்வளவு செலவு

இவர் அணியும் சட்டை ரூ. 3600, பேன்ட் ரூ. 6700, ‘டை’ ரூ. 2000 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலே அணியும் ‘ஜாக்கெட்’ மற்றும் கோட் சேர்ந்து ரூ. 15000 என கூறப்படுகிறது. இவரின் ‘ஷூ’ விலையுடன் சேர்த்தால் மொத்தம் ரூ. 34 ஆயிரம் செலவாகிறது. மற்ற பயிற்சியாளருடன் ஒப்பிடுகையில், இது குறைவுதான் என்கின்றனர் ரசிகர்கள்.

கடந்த 2007 முதல், இங்கிலாந்து அணியினருக்கான ஆடைகளை, மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் நிறுவனம்தான் வழங்கி வருகிறது. இதன் விற்பனை, ‘ஆன்லைனில்’ சூடுபிடித்துள்ளது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?