Advertisement


குரோஷியா யோகம்: ரஷ்யா சோகம்

ஜூலை 08, 2018.
 Comments  
 


FIFA World Cup Soccer 2018, Russia, Croatia
 

சோச்சி: உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் ரஷ்யா, காலிறுதியில் வீழ்ந்து பரிதாபமாக வெளியேறியது. பரபரப்பான ஆட்டத்தில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் குரோஷிய அணியிடம் 3–4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால், உள்ளூர் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். குரோஷிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. சோச்சி நகரில் நடந்த காலிறுதியில் உலகின் ‘நம்பர்–70’ ரஷ்ய அணி, 20வது இடத்தில் உள்ள குரோஷியாவை எதிர்கொண்டது. சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கிய ரஷ்ய அணிக்கு 31வது நிமிடத்தில் டிஜுபா ‘பாஸ்’ செய்த பந்தில் டெனிஸ் செர்ரிஷேவ் முதல் கோல் அடித்து 1–0 என முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால் இது நிலைக்கவில்லை. 

ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் குரோஷியாவின் மரியோ மாண்டிஜுகிச் துாக்கி அடித்த பந்தை தலையால் முட்டி கோலடித்த ஆன்டிரேஜ் கிராமரிச்பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில், 60வது நிமிடத்தில் இவான் பெரிசிச் அடித்த பந்து ‘கோல்போஸ்ட்டில்’ பட்டு திரும்ப குரோஷியாவின் கோல் வாய்ப்பு வீணானது. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என சமநிலை வகித்தது. இதனால் போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. ஆட்டத்தின் 101வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ‘கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் கேப்டன் லுாகா மாட்ரிச் துாக்கி அடித்த பந்தை டொமகோஜ் விடா தலையால் முட்டி ஒரு கோலடிக்க குரோஷிய அணி 2–1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் 115வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் ரஷ்யாவின் டிஜகோவ் துாக்கி அடித்த பந்தை பிரேசிலில் பிறந்த மரியோ பெர்ணான்டஸ் தலையால் முட்டி ஒரு கோலடித்தார். இதனையடுத்து கூடுதல் நேர முடிவிலும் போட்டி 2–2 என சமநிலையில் இருந்தது.

அதிர்ச்சி தோல்வி

இதனால் வெற்றியாளரை முடிவு செய்ய ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறை பின்பற்றப்பட்டது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். லாட்டரி போன்ற இதில் குரோஷிய அணிக்கு யோகம் அடித்தது. 

‘ஹீரோ டூ ஜீரோ’

குரோஷியாவுக்கு எதிராக 115வது நிமிடத்தில் கோலடித்து நம்பிக்கை தந்த மரியோ பெர்ணான்டஸ், ‘ஹீரோ’ ஆனார். ஆனால்,  ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் கோட்டைவிட்ட இவர், சில நிமிடங்களில் ரசிகர்கள் மனதில் ‘ஜீரோ’ ஆனார்.

முதல் கோல்

குரோஷியாவின் டொமகோஜ் விடா, 101வது நிமிடத்தில் கோலடித்தார். இது, இம்முறை கூடுதல் நேரத்தில் பதிவான முதல் கோல் என்ற பெருமை பெற்றது. தவிர உலக கோப்பை வரலாற்றில் குரோஷியா சார்பில் கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட முதல் கோலானது.

20

குரோஷிய அணி, 20 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. கடைசியாக 1998ல் பிரான்சில் நடந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பின் 2002, 2006, 2014ல் நடந்த உலக கோப்பையில் பங்கேற்ற குரோஷிய அணி லீக் சுற்றோடு திரும்பியது.

2

உலக கோப்பை தொடரில் 6வது முறையாக விளையாடும் குரோஷிய அணி, 2வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இதற்கு முன் கடந்த 1998ல் அரையிறுதிக்கு தகுதி பெற்ற குரோஷியா, 3வது இடம் பிடித்தது.

அர்ஜென்டினாவுக்கு பின்...

இம்முறை குரோஷிய அணி, டென்மார்க் (‘ரவுண்டு–16’), ரஷ்யா (காலிறுதி) அணிகளை ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வென்றது. இதன்மூலம் அர்ஜென்டினாவுக்கு பின் (1990, எதிர்: காலிறுதியில் யுகோஸ்லாவியா, அரையிறுதியில் இத்தாலி), ஒரு தொடரில் 2 முறை ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமை பெற்றது குரோஷியா.

முதல் கோல்

குரோஷியாவின் டொமகோஜ் விடா, 101வது நிமிடத்தில் கோலடித்தார். இது, இம்முறை கூடுதல் நேரத்தில் பதிவான முதல் கோல் என்ற பெருமை பெற்றது. தவிர உலக கோப்பை வரலாற்றில் குரோஷியா சார்பில் கூடுதல் நேரத்தில் அடிக்கப்பட்ட முதல் கோலானது.

சொந்த மண் சோகம்

காலிறுதியில் ரஷ்ய அணி தோல்வியடைந்ததால், தொடரை நடத்தும் அணி உலக கோப்பை வெல்லும் வாய்ப்பபை இழந்தது. கடைசியாக 1998ல் பிரான்சில் நடந்த தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* இதுவரை உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), மேற்கு ஜெர்மனி (1974), அர்ஜென்டினா (1978), பிரான்ஸ் (1998) என 6 அணிகள் மட்டும் சொந்த மண்ணில் உலக கோப்பை வென்றுள்ளன.

* சொந்த மண்ணில் பைனலுக்கு முன்னேறிய பிரேசில் (1950, எதிர்: உருகுவே), சுவீடன் (1958, எதிர்: பிரேசில்) என 2 அணிகள் மட்டும் கோப்பை வெல்ல தவறின.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?