Advertisement


வாழ்த்து மழையில் தோனி

ஜூலை 07, 2018.
 Comments  
 


dhoni
 

கார்டிப்: தனது 37வது பிறந்த நாள் கொண்டாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, சச்சின், கோஹ்லி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்தவர் தோனி, 37. கடந்த 1981, ஜூலை 7ல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். கடந்த 2004ல் இந்திய அணியில் அறிமுகமான தோனி, தனது சிறப்பான செயல்பாட்டால் கேப்டனாக உயர்ந்தார். இந்திய அணிக்கு ‘டுவென்டி–20’ (2007), 50 ஓவர் (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) என, மூன்று விதமான உலக கோப்பை பெற்றுத் தந்தார். தவிர டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை ‘நம்பர்–1’ இடத்துக்கு அழைத்துச் சென்றார். கடந்த 2014ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், ஒருநாள் மற்றும் ‘டுவென்டி–20’ கேப்டன் பதவிலியிருந்து விலகி, வீரராக மட்டும் விளையாடி வருகிறார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் விளையாடி வரும் தோனி, நேற்று தனது 37வது பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது அவரது மனைவி சாக்சி, மகள் ஜிவா, கேப்டன் கோஹ்லி, மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் சக இந்திய அணியினர் உடன் இருந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக கார்டிப் நகரில் நடந்த 2வது ‘டுவென்டி–20’ விளையாடியதன் மூலம், சச்சின், டிராவிட்டுக்கு பின் சர்வதேச அரங்கில் 500 போட்டிகளில் விளையாடிய 3வது இந்திய வீரரானார் தோனி.

தோனியின் மகள் ஜிவா, ‘ஹேப்பி பெர்த் டே பாப்பா, யு ஆர் கெட்டிங் ஓல்டு’ என்ற பாடலை பாடி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோவை பி.சி.சி.ஐ., தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘‘இந்த வயதிலும் முழு உடற்தகுதியுடன் உள்ள நீங்கள் வேகமாக ஓடுகிறீர்கள். இதனை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னதாக உங்கள் தலைமையின் கீழ் விளையாடினேன். தற்போது உங்களுடன் விளையாடுவதை கவுரமாக கருதுகிறேன்,’’ என்றார்.

சச்சின்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி. சர்வதேச அரங்கில் 500வது போட்டியில் விளையாடியதற்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்.

ரெய்னா: ஜாம்பவானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சேவக்: போட்டியில் வேகமாக ‘ஸ்டெம்பிங்’ செய்வதை விட, உங்களது வாழ்க்கையில் அதிவேகமாக மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கட்டும். ‘ஓம் பினிஷாய நமக’.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?