Advertisement


விம்பிள்டன்: பெடரர், செரினா அபாரம்

ஜூலை 07, 2018.
 Comments  
 


federer
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில்  ‘நடப்பு சாம்பியன்’ ‘நம்பர்–2’ வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 8வது இடத்திலுள்ள தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை சந்தித்தார். விம்பிள்டனில் 8 முறை சாம்பியனான பெடரர் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, முதலிரண்டு செட்டை 6–2, 7–6 என கைப்பற்றினார். இதன்பின், ஆண்டர்சன் ஆதிக்கத்தை துவக்கினார். மூன்றாவது செட்டை 7–5 என வசப்படுத்திய இவர், அடுத்த செட்டையும் 6–4 என தனதாக்கினார். இதனால், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் விறுவிறுப்பு அதிகரித்தது. இதில் போராடிய பெடரர் 11–13 என கோட்டைவிட்டார். 4 மணி நேரம் 13 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், பெடரர் 6–2, 7–6, 5–7, 4–6, 11–13 என தோல்வியடைந்தார். 

ஜோகோவிச் முன்னேற்றம்

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–21’ வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஜப்பானின் நிஷிகோரியை (28வது இடம்) எதிர் கொண்டார். முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய ஜோகோவிச், அடுத்த செட்டை 3–6 என இழந்தார். பின், எழுச்சி கண்ட இவர் அடுத்த இரண்டு செட்டையும் 6–2, 6–2 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம் 35 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஜோகோவிச் 6–3, 3–6, 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், இத்தொடரில் 2015க்குப்பின் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார். கடந்த 2016, 17ம் ஆண்டில் முறையே 3வது சுற்று, காலிறுதியுடன் திரும்பினார்.

திவிஜ் ஜோடி ஏமாற்றம்

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் ஆர்டம் ஜோடி, அமெரிக்காவின் மைக் பிரையன், ஜாக் சாக் ஜோடியை சந்தித்தது. முதலிரண்டு செட்டை திவிஜ் ஜோடி 6–7, 6–7 என பறிகொடுத்தது. பின், எழுச்சி கண்ட திவிஜ் ஜோடி அடுத்த செட்டை 7–6 என வசப்படுத்தியது. நான்காவது செட்டில் போராடிய இந்த ஜோடி 4–6 என இழந்தது. மூன்று மணி நேரம் 14 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், திவிஜ், ஆர்டம் ஜோடி 6–7, 6–7, 7–6, 4–6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. ஏற்கனவே, போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி உள்ளிட்டோர் தொடரிலிருந்து வெளியேறி விட்டனர். இதன் மூலம், இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?