Advertisement


காலிறுதியில் கலக்குவாரா நெய்மர்

ஜூலை 05, 2018.
 Comments  
 


FIFA World Cup Soccer 2018, Brazil, Belgium, Neymar
 

கசான்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள காலிறுதியில் பிரேசில், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதில் நெய்மரின் கலக்கல் ஆட்டம் கைகொடுக்கும் பட்சத்தில் பிரேசில் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறலாம்.

ரஷ்யாவில் நடக்கும் 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கசான் நகரில் இன்று நடக்கவுள்ள காலிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ பிரேசில் அணி, 3வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

நெய்மர் நம்பிக்கை: ‘இ’ பிரிவில் இடம் பெற்றிருந்த பிரேசில் அணி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியை ‘டிரா’ செய்தது. பின் எழுச்சி கண்டு கோஸ்டா ரிகா, செர்பியா அணிகளை வீழ்த்தி ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. மெக்சிகோ அணிக்கு எதிரான ‘ரவுண்டு–16’ சுற்று போட்டியில் நெய்மரின் அபார ஆட்டம் கைகொடுக்க 2–0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரேசில் அணி, கடந்த 2014ல் நடந்த காலிறுதியில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

கடந்த போட்டிகளில் கோலடித்த நெய்மர் (2 கோல்), கவுட்டினோ (2), பவுலினோ (1), தியாகோ சில்வா (1), ராபர்டோ பிர்மினோ (1) மீண்டும் கைகொடுத்தால் பிரேசில் அணி சுலபமாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

தோல்வி இல்லை: ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்திருந்த பெல்ஜியம் அணி, பனாமா, துனிசியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. ஜப்பானுக்கு எதிரான ‘ரவுண்டு–16’ சுற்றுப் போட்டியில் ஒருகட்டத்தில் 0–2 என பின்தங்கி இருந்த பெல்ஜியம் அணி பின் எழுச்சி கண்டு 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் காலடி வைத்தது. இம்முறை ‘டிரா’, தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் பெல்ஜியம் அணி, கடந்த 2014ல் நடந்த காலிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

லீக் மற்றும் ‘ரவுண்டு–16’ போட்டிகளில் கோலடித்த லுகாகு (4 கோல்), ஈடன் ஹசார்டு (2),மெர்டன்ஸ் (1), மிக்கி பாட்ஷுவாய் (1), அட்னன் ஜானுஜாஸ் (1), ஜான் வெர்டாங்ஹன் (1), பெலாய்னி (1), நாசிர் சாட்லி (1) ஆகியோர் அசத்தும் பட்சத்தில் 1986க்கு பின் அரையிறுக்குள் அடியெடுத்து வைக்கலாம்.

நான்கு முறை

சர்வதேச கால்பந்து அரங்கில் பிரேசில், பெல்ஜியம் அணிகள் 4 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 3, பெல்ஜியம் ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இதில் பிரேசில் 10, பெல்ஜியம் 6 கோல் அடித்தன.

ஒரு முறை

உலக கோப்பை கால்பந்து அரங்கில் பிரேசில், பெல்ஜியம் அணிகள் ஒரே ஒரு முறை மோதி இருந்தன. கடந்த 2002ல் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் பிரேசில் அணி 2–0 என வெற்றி பெற்றது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?