Advertisement


சாதித்து காட்டுவாரா லுாயிஸ் சாரஸ்

ஜூலை 05, 2018.
 Comments  
 


FIFA World Cup Soccer 2018, Quarter Final, Uruguay, France, Luiz Suarez
 

நிஸ்னி நோவ்கோராடு: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கவுள்ள காலிறுதியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் லுாயிஸ் சாரஸ் கோலடித்து சாதிக்கும் பட்சத்தில் உருகுவே அணி அரையிறுதிக்கு முன்னேறலாம்.

ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நிஸ்னி நோவ்கோராடு நகரில் இன்று நடக்கவுள்ள காலிறுதியில் உலகின் ‘நம்பர்–7’ பிரான்ஸ் அணி, 14வது இடத்தில் உள்ள உருகுவே அணியுடன் மோதுகிறது.

கவானி கலக்கல்: ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த உருகுவே அணி, லீக் சுற்றில் எகிப்து, சவுதி அரேபியா, ரஷ்யா அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணிக்கு எதிரான ‘ரவுண்டு–16’ போட்டியில் கவானி 2 கோல்டித்து கைகொடுக்க, 2–1 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. கடந்த 2014ல் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் உருகுவே அணி, கொலம்பியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இம்முறை ‘டிரா’, தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் உருகுவே அணிக்கு கடந்த போட்டிகளில் கோலடித்து கைகொடுத்த கவானி (3 கோல்), லுாயிஸ் சாரஸ் (2), ஜிமென்ஸ் (1), செரிஷேவ் (1) ஆகியோர் மீண்டும் சாதித்தால், 2010க்கு பின் அரையிறுதிக்கு செல்லலாம்.

கிரீஸ்மன் எதிர்பார்ப்பு: லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வீழ்த்திய பிரான்ஸ் அணி, டென்மார்க் அணிக்கு எதிராக ‘டிரா’ செய்தது. இரண்டு வெற்றி, ஒரு ‘டிரா’ என 7 புள்ளிகளுடன் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் அணி, ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் மெஸ்சியின் அர்ஜென்டினாவை 4–3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

கடந்த போட்டிகளில் கோலடித்த கிரீஸ்மன் (2 கோல்), மபே (2), பெஹிச் (1), பவார்டு (1) கைகொடுக்கும் பட்சத்தில் கடந்த 2006க்கு பின் அரையிறுதிக்குள் நுழையலாம்.

எட்டு முறை

சர்வதேச கால்பந்து வரலாற்றில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் உருகுவே 3, பிரான்ஸ் ஒரு போட்டியில் வென்றன. நான்கு போட்டிகள் ‘டிரா’ ஆனது.

* இதில் உருகுவே 8, பிரான்ஸ் 4 கோல் அடித்தன.

மூன்று முறை

உலக கோப்பை கால்பந்து அரங்கில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் 3 முறை மோதின. இதில் உருகுவே ஒரு முறை (1966, 2–1) வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் (2002, 2010) கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?