Advertisement


தொடரை வெல்லுமா இந்தியா

ஜூலை 05, 2018.
 Comments [2]  
 


India, England, T20 Cricket, Cardiff
 

கார்டிப்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று நடக்கவுள்ளது. லோகேஷ் ராகுல், குல்தீப் மீண்டும் அசத்தினால் தொடரை வெல்லலாம். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று கார்டிப்பில் நடக்கவுள்ளது.

இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கிய மகிழ்ச்சியில் உள்ளது. ஷிகர் தவான் ஏமாற்றினாலும், மற்றொரு துவக்க வீரர் ரோகித் சர்மா ஓரளவு கைகொடுத்தார். அயர்லாந்துக்கு எதிராக துவக்கம் தந்த லோகேஷ் ராகுல், 70 ரன் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிராக 3வது இடத்தில் களமிறங்கிய இவர் சதம் அடித்தார். இப்படி எந்த இடத்திலும் வாணவேடிக்கை காட்டுகிறார் ராகுல். கேப்டன் கோஹ்லி அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியிலும் (0,9 ரன்) ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இன்று, ரன் குவித்தால் தொடரை கைப்பற்றலாம். ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா என சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். 

மிரட்டும் குல்தீப்: சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மிரட்டுகிறார். மணிக்கட்டு மந்திர பவுலரான இவர், 5 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இவரின் ‘சுழல்’ வலையில் இன்றும் பல விக்கெட் விழ வாய்ப்புள்ளது. சகாலின் சுழற்பந்துவீச்சில் இன்னும் முன்னேற்றம் அவசியம். ‘வேகத்தில்’ ரன் வள்ளலான புவனேஷ்வருடன் (4 ஓவர், 45 ரன்) ஒப்பிடுகையில் உமேஷ் (2 விக்.,) ஜொலிக்கிறார்.

ஏமாற்றும் ‘மிடில்–ஆர்டர்’: ஒருநாள் அரங்கில் அதிக ரன் (481) குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து, ‘டுவென்டி–20’ போட்டியில் தலைகீழாக உள்ளது. கடந்த 10 போட்டியில் 4ல்தான் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தோல்வி கூடுதல் சோகத்தை அளித்துள்ளது. துவக்க ஜோடியான ஜேசன் ராய், பட்லர் மட்டுமே ஆறுதல் தருகின்றனர். ‘மிடில்–ஆர்டர்’ துவங்கி பின் வரிசை வரை சரிவுதான். கடந்த முறை, ஹேல்ஸ், கேப்டன் மார்கன், ஜோ ரூட் உள்ளிட்டோர் சொதப்பினர். குல்தீப்பின் ‘சுழல்’ ஆயுதத்தை சமாளிப்பதில்தான் இவர்களின் வெற்றி அடங்கி உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் வில்லே, ஜோர்டான், பிளங்கட் என ஒருவர் கூட சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தவில்லை. மொயீன் அலியின் ‘சுழலும்’ துல்லியமாக இல்லை. 

‘மெஷின்’ பயிற்சி

முதல் போட்டியில் ‘சைனாமேன்’ பவுலர் குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி தந்தார். இவரது ‘சுழலை’ சமாளிக்க ‘மெர்லின்’ என்ற சுழற்பந்து வீசும் ‘மெஷின்’ உதவியுடன் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த 2005, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ‘சுழல்’ வீரர் வார்னை சமாளிக்க இந்த மெஷினை பயன்படுத்தினர். இதன்பின் தற்போது குல்தீப்பை சமாளிக்க, இதைக் கொண்டு வந்துள்ளனர். 

மழை வருமா

கார்டிப் நகரின் இன்றைய வெப்பநிலை அதிகபட்சம் 25, குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 10 சதவீதம் வாய்ப்புள்ளது.

இதுவரை...

இங்கிலாந்து அணிக்கு கார்டிப் மைதானம் ராசியானது. இங்கு விளையாடிய 4 ‘டுவென்டி–20’ போட்டியிலும் வென்றுள்ளது. இந்திய அணி முதல் முறையாக இங்கு ‘டுவென்டி–20’யில் விளையாட உள்ளது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
boopathi raj 2 weeks ago | Report abuse
வெரி வெரி குட் நியூஸ் சூப்பர்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 2 weeks ago | Report abuse
வெல்லும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?