Advertisement


மெஸ்சி, ரொனால்டோ... ‘டைவர்ஸ்’

ஜூலை 05, 2018.
 Comments  
 


Messi, Ronaldo, Russia Soccer Couples, Diverce
 

செல்யபின்ஸ்க்: மெஸ்சி, ரொனால்டோ என இருவரில் யார் சிறந்தவர் என்ற பிரச்னை காரணமாக ரஷ்ய தம்பதிகள் விவாகரத்து செய்ய உள்ளனர்.

ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்த தம்பதியினர் ஆர்சன், லுட்மிலா. கடந்த 2002 உலக கோப்பை தொடரின் போது பாரில் சந்தித்துக் கொண்டனர். பிறகு காதலில் விழுந்து திருமணம் செய்தனர். இதில் ஆர்சன், மெஸ்சி ரசிகர். லுட்மிலாவுக்கு ரொனால்டோவை பிடிக்கும்.

இதில் யார் சிறந்தவர் என்ற விவாதம் கால்பந்து உலகில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இது இந்த ஜோடியிடமும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இதில் மோதல் ஏற்பட்டது. நைஜீரிய அணிக்கு எதிராக மெஸ்சி கோல் அடித்ததை ஆர்சன் கொண்டாடினார். இதற்கு லுட்மிலா எதிர்ப்பு தெரிவிக்க, மறுநாள் விவாகரத்து (‘டைவர்ஸ்’) வழக்கு பதிந்து விட்டார்.

இதுகுறித்து ஆர்சன் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடரில் துவக்கத்தில், ‘மெஸ்சிக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை,’ என லுட்மிலா தெரிவித்தார். ஐஸ்லாந்துக்கு எதிராக ‘பெனால்டி’ வாய்ப்பை வீணடித்த மெஸ்சியை கேலி பேசினார். இதனால் பொறுமை இழந்த நான்,‘ ரொனால்டோ ‘வேஸ்ட்’ என்றேன். பிறகு எனது பொருட்களை எடுத்துக் கொண்டு தனியாக வந்துவிட்டேன்,’’ என்றார்.

கடந்த 2002ல் இவர்களை சேர்த்த உலக கோப்பை கால்பந்து தொடர், 16 ஆண்டுக்குப் பின் சொந்தமண்ணில் வந்து, ஜோடியை பிரித்து விட்டது சோகம் தான்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?