Advertisement


விம்பிள்டன்: கெர்பர் அசத்தல்

ஜூலை 05, 2018.
 Comments  
 


Wimbledon Tennis, Kerber
 

லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் ‘நம்பர்–10’ வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின் கிளாரே லியை 3–6, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் கனடாவின் பவுச்சர்டு 4–6, 5–7 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியிடம் வீழ்ந்தார்.

மற்ற போட்டிகளில் ஜப்பானின் நயோமி, ஆஸ்திரேலியாவின் டாரியா உள்ளிட்டோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர். 

வாவ்ரின்கா ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, இத்தாலியின் தாமஸ் பேபியானோவை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–7 என போராடி இழந்த வாவ்ரின்கா, அடுத்த செட்டையும் 3–6 என பறிகொடுத்தார். கடைசி செட்டிலும் ஏமாற்றிய இவர் 6–7 என கோட்டைவிட்டர். இரண்டு மணி நேரம் 40 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், வாவ்ரின்கா 6–7, 3–6, 6–7 என தோல்வியடைந்தார்.

மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

திவிஜ் ஜோடி முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் ஆர்டம் ஜோடி 7–6, 6–7, 6–3, 6–2 என மால்டோவாவின் ஆல்பர்ட், துனிசியாவின் ஜகாரி ஜோடியை வீழ்த்தியது. 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?