Advertisement


43 ரன்னுக்கு சுருண்டது வங்கம்

ஜூலை 04, 2018.
 Comments  
 


Bangladesh, West Indies, Test Cricket, 43 Runs
 

நார்த் சவுண்டு: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 43 ரன்னுக்கு சுருண்டு, தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நார்த் சவுண்டு நகரில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு கீமர் ரோச் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ தமிம் இக்பால் (4), மோமினுல் ஹக் (1), முஷ்பிகுர் ரஹிம் (0), கேப்டன் சாகிப் அல் ஹசன் (0), மகமதுல்லா (0) அவுட்டாகினர். மிகுயல் கம்மின்ஸ் பந்தில் நுருல் ஹசன் (4), மெகிதி ஹசன் மிராஸ் (1) வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லிட்டன் தாஸ் (25) ஆறுதல் தந்தார். கேப்டன் ஹோல்டர் பந்தில் கம்ருல் இஸ்லாம் ரபி (0), அபு ஜெயத் (2) சரணடைந்தனர்.

முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 43 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ருபெல் ஹொசைன் (6) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5, கம்மின்ஸ் 3, ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பிராத்வைட் அபாரம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டெவன் ஸ்மித் (58) நல்ல துவக்கம் தந்தார். பாவெல் (48) அரைசத வாய்ப்பை இழந்தார். பொறுப்பாக ஆடிய கிரெய்க் பிராத்வைட், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்து, 158 ரன் முன்னிலை வகித்திருந்தது. பிராத்வைட் (88), பிஷூ (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

மோசமான ஸ்கோர்

முதல் இன்னிங்சில் 43 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, டெஸ்ட் அரங்கில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2007ல் இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடந்த டெஸ்டில் 62 ரன்னுக்கு சுருண்டது வங்கதேசத்தின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

18.4 ஓவர்

வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 18.4 ஓவரில் 43 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓவரில் முடிந்த முதல் இன்னிங்ஸ் பட்டியலில் 2வது இடம் பிடித்தது. கடந்த 2015ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 18.3 ஓவரில் 60 ரன்னுக்கு சுருண்டது, இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.ஞி

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?