Advertisement


பயமா...எனக்கா...: குஷியில் குல்தீப்

ஜூலை 04, 2018.
 Comments  
 


Kuldeep Yadav, India, Cricket, England T20 Series
 

மான்செஸ்டர்: ‘‘தங்களது பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் அடித்தால் பயப்படக் கூடாது. நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்,’’ என குல்தீப் யாதவ் தெரிவித்தார். 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சுழலில் அசத்திய குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் 101 ரன்கள் எடுத்து  கைகொடுக்க இந்திய அணி 18.2 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பெற்ற தொடர்ச்சியான 7வது ‘டுவென்டி–20’ வெற்றி இது. தவிர ‘டுவென்டி–20’ வரலாற்றில் ‘சேஸ்’ செய்த போது, இரண்டு சதம் அடித்த முதல் வீரர் இவர் தான். 

குல்தீப் யாதவ் கூறியது:

துவக்கத்தில் பயிற்சியின் போது பேட்ஸ்மேன்கள் சிக்சர் அடிக்கும் வகையில் பந்து வீசுமாறு எனது பயிற்சியாளர் கபில் பாண்டே கூறுவார். இதனால் போட்டிகளில் இது எப்படி நடக்கும் எனத் தெரியும். எனக்கு எவ்வித நெருக்கடி உணர்வும் ஏற்படாது. 

ஏனெனில் இதுபோன்ற சூழலை துவக்கத்திலேயே பார்த்துள்ளேன். இதனால் பேட்ஸ்மேன்கள் சிக்சர் அடிக்கும் போது நான் பயப்பட மாட்டேன். விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என விரும்பினால், பந்தை களத்தில் சுழற்ற வேண்டும். பந்து சுழலவில்லை என்றால் அவர் சுழற்பந்து வீச்சாளரே அல்ல. 

ஒருவேளை சுழற்பந்து வீச்சாளர் ‘டுவென்டி–20’ போட்டியில் 4 அல்லது 5 விக்கெட் வீழ்த்தினால், அவரது அணிக்கு சாதகமாக போட்டி மாறிவிடும். சிறுவயதில் இதைத் தான் கற்றுள்ளேன். தற்போது இங்கிலாந்தில் இதை பின்பற்றுகிறேன்.

பவுலிங் செய்யும் போது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன் யார் என பார்க்க மாட்டேன். முடிந்தவரை என்ன செய்ய முடியுமோ அதை முயற்சிப்பேன். சரியான இடம் மற்றும் வேகத்தில் பந்துவீசினால் எந்த அணி வீரர்களும் திணறுவது உறுதி.

இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பர். இதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

தோற்றாலும் கொண்டாட்டம்

முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து. இந்த சோகத்தில் ‘டிரசிங் ரூம்’ சென்றனர். இந்நிலையில் உலக கோப்பை கால்பந்தில் கொலம்பியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இதை ‘டிவி’யில் பார்த்த மொயீன் அலி உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஒன்றாக இணைந்து வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?