Advertisement


விம்பிள்டன்: அசரன்கா அதிர்ச்சி தோல்வி

ஜூலை 04, 2018.
 Comments  
 


Wimbledon Tennis, Victoria Azarenka, Belarus
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா தோல்வியடைந்தார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். ஒரு மணி நேரம், 12 நிமிடம் வரை நீடித்த போட்டியில் ஏமாற்றிய அசரன்கா 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6–4, 6–3 என, தாய்லாந்தின் லுக்சிகாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் பல்கேரியாவின் விக்டோரியா டோமோவாவை  வீழ்த்தினார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4–6, 6–1, 5–7 என்ற கணக்கில் ரஷ்யாவின் எகடரினா மகரோவாவிடம் தோல்வியடைந்தார்.

மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், குரோஷியாவின் டோனா வேகிக், ரஷ்யாவின் ரோடினா, பெல்ஜியத்தின் யனினா விக்மேயர்,செக்குடியரசின் லுாசி சபரோவா, நெதர்லாந்தின் பெர்டன்ஸ்  உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ராவோனிக் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கனடாவின் மிலோஸ் ராவோனிக், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் மோதினர். இரண்டு மணி நேரம், 38 நிமிடம் வரை சென்ற போட்டியில் ராவோனிக், 7–6, 7–6, 7–6 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

பெடரர் அபாரம்: மற்றொரு 2வது சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,  6–4, 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் சுலோவாகியாவின் லுாகாஸ் லேக்கோவை தோற்கடித்தார்.

மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் பிரான்சின் மோன்பில்ஸ், அமெரிக்காவின் சாம் குயரே, ஆஸ்திரியாவின் டெனிஸ் நோவக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

புரவ் ராஜா ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் புரவ் ராஜா, பிரான்சின் பேப்ரைஸ் மார்டின் ஜோடி 2–6, 4–6, 7–6, 6–4, 9–11 என்ற செட் கணக்கில் போஸ்னியாவின் மிர்சா பேசிக், செர்பியாவின் துசான் லஜோவிச் ஜோடியிடம் போராடி தோல்வியடைந்து ஏமாற்றியது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?