Advertisement


இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து வெற்றி

ஜூலை 04, 2018.
 Comments  
 


Indonesia Open Badminton, Sindhu, Srikanth
 

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். 

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவேயை சந்தித்தார். முதல் செட்டை 21–15 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 19–21 என போராடி பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய இவர் 21–13 என தனதாக்கினார். முடிவில், சிந்து 21–15, 19–21, 21–13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில், இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி 12–21, 10–21 என டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்கிடம் வீழ்ந்தார். 

ஸ்ரீகாந்த் தோல்வி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கென்டோவுடன் மோதினார். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 21–12, 14–21, 15–21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மானு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21–15, 15–21, 17–21 என சீனாவின் லியு, ஜியாங் ஜோடியிடம் வீழ்ந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனவ், சிக்கி ரெட்டி ஜோடி 12–21, 14–21 என சீனாவின் ஜியாங், ஹியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?