Advertisement


பிரனாய் அசத்தல்

ஜூலை 03, 2018.
 Comments  
 


Prannoy
 

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய், சீனாவின் லின் டானை வீழ்த்தினார்.

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நம்பர்–12’ வீரரான இந்தியாவின் பிரனாய், 5 முறை உலக சாம்பியனான சீனாவின் லின் டானை (8வது இடம்) எதிர் கொண்டார். முதல் செட்டை 21–15 என கைப்பற்றிய பிரனாய், அடுத்த செட்டை 9–21 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய இவர் 21–14 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் நீடித்த போட்டியின் முடிவில், பிரனாய் 21–15, 9–21, 21–14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

* மற்றொரு முதல் சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–9, 12–21, 22–20 என டென்மார்க்கின் ராஸ்மசிடம் வீழ்ந்தார்.

* மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத் 10–21, 13–21 என சீன தைபேயின் வாங் டிசுவிடம் தோல்வியடைந்தார்.

செய்னா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா 21–12, 21–12 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டினாரை வீழ்த்தினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 8–21, 15–21 என ஜப்பானின் ஹிரோயுகி, யுட்டா ஜோடியிடம் வீழ்ந்தது.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
Sinhalese Sports Club, Colombo

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?