Advertisement


‘பஞ்ச்’ கொடுத்த பின்ச்

ஜூலை 03, 2018.
 Comments  
 


finch
 
ஹராரே: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில், அதிக ரன் குவித்து(172) உலக சாதனை படைத்தார் பின்ச். இவரின் விளாசல் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 100 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

ஜிம்பாப்வே மண்ணில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இதன் 3வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

‘சூப்பர்’ துவக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், ஷார்ட் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. நியும்பு ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார் பின்ச். தொடர்ந்து மிரட்டிய இவர் 50வது பந்தில் சதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்த நிலையில், ஷார்ட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்ச் 172 ரன்களில் (76 பந்து, 16 பவுண்டரி, 10 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கை விரட்டிய, ஜிம்பாப்வே அணிக்கு சிபாபா (18), சாலமன் (28) விரைவில் திரும்பினர். கேப்டன் மசகட்சா (12), சிகும்பரா (7) அணியை கைவிட்டனர். மற்றவர்களும் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிளசிங் (1), நியும்பு (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே, முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அதிக ரன் 

எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த பின்ச், ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன் குவித்து (172) உலக சாதனை படைத்தார். இதன் மூலம், தனது முந்தைய சாதனையை (156 ரன், எதிர்– இங்கிலாந்து, 2013, சவுத்தாம்ப்டன்) முறியடித்தார்.

223

பின்ச், ஷார்ட் முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில், எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன் குவித்த ஜோடி என்ற சாதனை படைத்தது. இதற்கு முன், நியூசிலாந்தின் கப்டில், வில்லியம்சன் ஜோடி (எதிர்– பாக்., 2016, ஹாமில்டன்) 171 ரன்கள் சேர்த்ததே அதிகம். 

2

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ போட்டியில் அதிக ரன் குவித்த ஜோடிகள் பட்டியலில் பின்ச், ஷார்ட் ஜோடி (223 ரன்) 2வது இடம் பிடித்தது. கடந்த 2016ல் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 229 ரன்கள் (எதிர்– குஜராத்) சேர்த்த பெங்களூரு அணியின் கோஹ்லி, டிவிலியர்ஸ் ஜோடி முதலிடம் வகிக்கிறது.

175

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பெங்களூரு அணியின் கெய்லுக்குப்பின் (175 ரன், எதிர்– புனே வாரியர்ஸ், 2013, பெங்களூரு, ஐ.பி.எல்.,) இரண்டாவது இடம் பிடித்தார் பின்ச். 

76

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ போட்டியில், ஒரே இன்னிங்சில் அதிக பந்தை (76) சந்தித்த வீரர்கள் பட்டியலில் பின்ச் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஹயர் உள்ளூர் தொடரில் குயட்டா அணி சார்பில் விளையாடிய பாகிஸ்தானின் ஜுபிர் அகமது (77 பந்து, எதிர்– லார்கன் புல்ஸ், 2014) உள்ளார். 

100

இப்போட்டியில் அசத்தியதன் மூலம், ஆஸ்திரேலிய அணி ‘டுவென்டி–20’ அரங்கில் (100) ரன் அடிப்படையில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 95 ரன் வித்தியாசத்தில் (பிரிஸ்பேன். 2006) வென்றதே சிறந்ததாக இருந்தது. 

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?