Advertisement


நேரில் வந்த மெஸ்சி மனைவி

ஜூலை 02, 2018.
 Comments  
 


Antonella Roccuzzo, Messi Wife, FIFA World Cup Soccer
 

உலக கோப்பை ‘ரவுண்டு–16’ போட்டியில் பிரான்சிடம் தோற்றது மெஸ்சியின் அர்ஜென்டினா. சக வீரர்கள் நாடு திரும்பிய நிலையில் மெஸ்சி மட்டும் ஸ்பெயின் சென்றார். அங்கிருந்து தனியாக பியுனஸ் ஏர்ஸ் சென்றார். இதற்கு முன் விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தார் மெஸ்சி மனைவி அன்டோனெல்லா. விமானநிலையத்தில் பத்திரிககையாளர்களை தவிர்த்த அவர், மனைவியுடன் காரில் கிளம்பிச் சென்றார்.

சிறுவர்கள் ‘மகிழ்ச்சி’

மெக்சிகோவுக்கு எதிரான ‘ரவுண்டு–16’ போட்டியை காண பிரேசில் ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்துள்ளனர். இதில் ஒரு பிரிவினர் சமாரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். உலக கோப்பை கால்பந்து சூழ்நிலையை அங்கு உருவாக்கினர். பந்துக்குப் பதில் பலுான்கள் வைத்து சிறுவர்களுடன் கால்பந்து விளையாடியது நெகிழ்ச்சியடைய செய்தது.

இனியஸ்டா ஓய்வு

ரஷ்யாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து ஸ்பெயின் வீரர் இனியஸ்டா, 34, சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 131 போட்டிகளில் 13 கோல் அடித்த இவர், 2010 ல் ஸ்பெயின் அணி உலக கோப்பை வெல்ல வெற்றி கோல் அடித்தவர். அவர் கூறுகையில்,‘‘ ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியது தான், ஸ்பெயின் அணிக்காக விளையாடிய கடைசிப் போட்டி,’’ என்றார்.

நல்லவேளை பார்க்கல

குரோஷிய அணிக்கு எதிரான டென்மார்க் மோதலைக் காண அந்நாட்டு பெண் அமைச்சர் மெட்டே, குடும்ப நண்பர்கள் உட்பட 145 பேர், கோபன்ஹேகனில் இருந்து கிளம்ப இருந்தனர். ஆனால் இந்த விமானம் மாஸ்கோவில் தரையிறங்க அனுமதி வாங்கவில்லை என்பதால் கடைசி நேரத்தில் பயணம் ரத்தானது. இதில் டென்மார்க் தோற்றது. நல்லவேளையாக நேரில் செல்லவில்லை.

இந்திய ரசிகர் பலி

உலக கோப்பை போட்டியை காண ரஷ்யா சென்றுள்ளார் இந்திய ரசிகர் ஒருவர். போர்ச்சுகல், உருகுவே அணிகள் மோதிய ‘ரவுண்டு–16’ போட்டியை காண சோச்சி சென்ற போது கார் மோதியதில் இவர் பலியானார். உலக கால்பந்தை காணவந்து பலியான முதல் ரசிகர் இவர் தான் என ‘பிபா’ தெரிவித்தது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?