Advertisement


விம்பிள்டன்: பெடரர் வெற்றி

ஜூலை 02, 2018.
 Comments  
 


Wimbledon Tennis, Federer, Venus Williams
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர் வெற்றி பெற்றார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்–2’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் துசான் லஜோவிச் மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 6–1, 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச் 6–1, 6–4, 6–4 என, ஜப்பானின் நிஷியோகாவை தோற்கடித்தார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் கனடாவின் ராவோனிக், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சாம் குயரே, ஸ்பெயினின் கார்சியா–லோபஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பெட்கோவிச் வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிச், சீனாவின் ஷுவாய் ஜாங் மோதினர். இதில் பெட்கோவிச் 6–4, 4–6, 6–2 என வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா, 7–5, 6–3 என, சுலோவாகியாவின் ரிபரிகோவாவை தோற்கடித்தார். செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 7–6, 2–6, 6–1 என்ற கணக்கில் பிரிட்டனின் டார்ட்டை வீழ்த்தினார்.

மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ், மடிசன் கீஸ், பெலாரசின் விக்டோரியா அசரன்கா, ரஷ்யாவின் மகரரோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

யூகி பாம்ப்ரி ஏமாற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, இத்தாலியின் தாமஸ் பேபியானோ மோதினர். இதில் யூகி பாம்ப்ரி 6–2, 3–6, 3–6, 2–6 என்ற  செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?