Advertisement


வெறுங்கையுடன் திரும்பும் மெஸ்சி

ஜூன் 30, 2018.
 Comments  
 


messi
 

 கசான்: பிரான்ஸ் அணிக்கு எதிரான ‘ரவுண்டு–16’ சுற்றுப்போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது. இதன் மூலம், 2006, 10, 14 மற்றும் தற்போது என உலக கோப்பை தொடரிலிருந்து வெறுங்கையுடன் திரும்பியது. கேப்டன் மெஸ்சி சோகத்தில் உறைந்தார். 

1986க்குப் பின்...

அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்ற பிறகு, ஏதாவது ஒரு ஐரோப்பிய அணியிடம் தோற்று வெளியேறிய இந்த அணி, இம்முறை பிரான்சிடம் வீழ்ந்தது. 

ராசியில்லா ராஜா

கடந்த 2014 உலக கோப்பை தொடரில் சிலி அணி பயிற்சியாளராக இருந்தார் ஜார்ஜ் சம்பாவோலி. ‘ரவுண்டு–16’ சுற்றில் இந்த அணி, பிரேசிலிடம் ‘பெனால்டியில்’ தோற்றது. இம்முறை ஜார்ஜ் பயிற்சியில் களமிறங்கிய அர்ஜென்டினா, ‘ரவுண்டு–16’ போட்டியில் பிரான்சிடம் தோற்றது.

5

கடந்த 1986 முதல் ‘ரவுண்டு–16’ சுற்று அறிமுகம் ஆனது. அன்று முதல் பிரான்ஸ் அணி கடைசியாக பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் ‘நாக் அவுட்’ (1986, 1998, 2006, 2014, 2018) போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.

3

இரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் அர்ஜென்டினா 6, பிரான்ஸ் 2ல் வெல்ல 4 போட்டி ‘டிரா’ ஆனது. நேற்று சாதித்த பிரான்ஸ் அணி, 3வது வெற்றியை பதிவு செய்தது. அர்ஜென்டினா அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் முதல் வெற்றி பெற்றது. இதற்கு முன் 1930, 1950ல் தோற்று இருந்தது.

‘மெச்டா’ பந்து

ரஷ்ய உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் இருந்த நீல நிற ‘டெல்ஸ்டார்’ பந்து பயன்படுத்தினர். ‘நாக் அவுட்’ சுற்று ஒவ்வொரு அணிகளுக்கும் கடைசி வாய்ப்பு என்பதால், இதில் சாதிக்க வேண்டும் என்ற பொருள்படும் வகையில் சிவப்பு நிற ‘டெச்டா’ பந்து பயன்படுத்தப்படுகிறது. ரஷ்ய மொழியில் இதற்கு கனவு, லட்சியம், விருப்பம் என அர்த்தம்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?