Advertisement


கோப்பை வென்றது இந்தியா: லோகேஷ் ராகுல், ரெய்னா விளாசல்

ஜூன் 29, 2018.
 Comments  
 


kuldeep
 

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2–0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல், ரெய்னா அரைசதம் விளாசினர்.

அயர்லாந்து சென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, இரண்டாவது போட்டி டப்ளின் நகரில் நடந்தது. அயர்லாந்து அணியில் பாய்ன்டர் நீக்கப்பட்டு வில்லியம் போர்டர்பீல்டு சேர்க்கப்பட்டார்.

சித்தார்த் அறிமுகம்

இந்திய அணியில் ஷிகர் தவான், தோனி, புவனேஷ்வர் குமார், பும்ராவுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் (அறிமுகம்) இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி கேப்டன் கேரி வில்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ராகுல் அபாரம்

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், கேப்டன் விராத் கோஹ்லி துவக்கம் தந்தனர். சிமி சிங் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விளாசினார் லோகேஷ் ராகுல். ரான்கின் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த கோஹ்லி (9), பீட்டர் சேஸ் ‘வேகத்தில்’ மீண்டும் வெளியேறினார். அடுத்து வந்த ரெய்னா, ஸ்டூவர்ட் தாம்ப்சன் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். சிமி சிங் வீசிய 8வது ஓவரில், 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ராகுல், ரான்கின் பந்தை சிக்சருக்கு அனுப்பி 28 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது கெவின் ஓபிரையன் பந்தில் ராகுல் (70 ரன், 36 பந்து, 6 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார்.

ரெய்னா அரைசதம்

அடுத்து வந்த ரோகித் சர்மா, ‘டக்–அவுட்’ ஆனார். கெவின் ஓபிரையன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரெய்னா, தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். பீட்டர் சேஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ரெய்னா (69), கெவின் ஓபிரையன் பந்தில் அவுட்டானார். சேஸ் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, ஓபிரையன் வீசிய 20வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. மணிஷ் பாண்டே (21), ஹர்திக் பாண்ட்யா (32) அவுட்டாகாமல் இருந்தனர். அயர்லாந்து சார்பில் கெவின் ஓபிரையன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

குல்தீப் அசத்தல்

கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு உமேஷ் யாதவ் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஸ்டிர்லிங் (0), போர்டர்பீல்டு (14) அவுட்டாகினர். சித்தார்த் கவுல் பந்தில் ஷனான் (2) வெளியேறினார். பால்பிர்னீ (9), கேப்டன் வில்சன் (15) சொற்ப ரன்னில் ‘பெவிலியன்’ திரும்பினர். கெவின் ஓபிரையன், சிமி சிங் ‘டக்–அவுட்’ ஆகினர். குல்தீப் ‘சுழலில்’ டாக்ரெல் (4) சிக்கினார். சகால் பந்தில் தாம்ப்சன் (13) போல்டானார். ராம்கின் (10) நிலைக்கவில்லை. அயர்லாந்து அணி 12.3 ஓவரில், 70 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் குல்தீப், சகால் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி, 2–0 என ‘டுவென்டி–20’ தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

முதன்முறை

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 208 ரன்கள் எடுத்த இந்திய அணி, 2வது போட்டியில் 213 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக 2 போட்டியில் 200 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்தது.

213

அயர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் 213 ரன்கள் குவித்த இந்திய அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 4வது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தது. கடந்த 2017ல் இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிராக போட்டியில் 260 ரன்கள் எடுத்தது, இந்தியாவின் அதிகபட்ச ‘டுவென்டி–20’ ஸ்கோராக உள்ளது.

13

அயர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் 13 சிக்சர் விளாசினர். சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், 2வது முறையாக இந்தியா சார்பில் ஒரு இன்னிங்சில் 13 சிக்சர் அடிக்கப்பட்டது. இதற்கு முன், 2009ல் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் 13 சிக்சர் பறக்கவிட்டனர்.

* இந்தியா சார்பில், இலங்கைக்கு எதிராக (2017, இடம்: இந்துார்) அதிகபட்சமாக 21 சிக்சர் அடிக்கப்பட்டது.

143

அயர்லாந்தை 143 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை பாகிஸ்தானுடன் (143 ரன் வித்தியாசம், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2018, இடம்: கராச்சி) பகிர்ந்து கொண்டது. கடந்த 2007ல் (இடம்: ஜோகனஸ்பர்க்) இலங்கை அணி 172 ரன் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது, சிறந்த வெற்றியாக உள்ளது.

* இது, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் இந்தியாவின் சிறந்த வெற்றி. இதற்கு முன், 2017ல் கட்டாக்கில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது சிறந்த வெற்றியாக இருந்தது.

70

இந்தியாவிடம் 70 ரன்னில் சுருண்ட அயர்லாந்து அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தனது 2வது மோசமான ஸ்கோரை பெற்றது. கடந்த 2010ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 68 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது அயர்லாந்தின் மோசமான ஸ்கோராக உள்ளது.

* தவிர சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனை படைத்தது அயர்லாந்து. இதற்கு முன், 2012ல் இந்தியாவுக்கு எதிராக கொழும்புவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 80 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது மோசமான ரன்னாக இருந்தது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?