Advertisement


ஆசிய விளையாட்டு: தீபா தகுதி

ஜூன் 27, 2018.
 Comments  
 


Dipa Karmakar
 

மெர்சின்: துருக்கியில் நடந்த உலக சேலஞ்ச் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார்.

துருக்கியில் உள்ள மெர்சின் நகரில், ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘வால்ட்’ பிரிவு தகுதிச் சுற்றில் 13.400 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய இவர், 14.150 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, உலக சேலஞ்ச் கோப்பையில் இவரது முதல் பதக்கம்.  தவிர, உலக சேலஞ்ச் கோப்பை தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். 

‘பேலன்ஸ் பீம்’ பிரிவு தகுதிச் சுற்றில் 11.850 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த தீபா, பைனலுக்கு முன்னேறினார்.

திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர், 24, கடந்த 2016ல் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான ‘வால்ட்’ பிரிவில் 4வது இடம் பிடித்தார். அதன்பின் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் காயம் முழுமையாக குணமடையாததால் பங்கேற்கவில்லை. இவர், இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கான 10 பேர் கொண்ட இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?