Advertisement


இலங்கை சாதனை வெற்றி

ஜூன் 27, 2018.
 Comments  
 


srilanka team
 

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அசத்திய இலங்கை அணி, பார்படாசில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டி முடிவில், வெஸ்ட் இண்டீஸ் 1–0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 204, இலங்கை 154 ரன்கள் எடுத்திருந்தன. வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 93 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. 

நான்காம் நாள் ஆட்டத்தில் குசால் மெண்டிஸ் (25) விரைவில் திரும்பினார். டிக்வெல்லா 6 ரன்கள் எடுத்தார். இருப்பினும், தில்ருவன் பெரேரா, குசால் பெரேரா இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். இவர்களின் பங்களிப்பு கைகொடுக்க, இலங்கை அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்ருவன் (23), குசால் (28) அவுட்டாகாமல் இருந்தனர். 

முதல் அணி

இதன் மூலம், பார்படாசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற வரலாறு படைத்தது. இதற்கு முன், இங்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற 16 டெஸ்டில் 11ல் தோல்வியே கிடைத்தது. 5 போட்டி டிராவில் முடிந்தது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமநிலையை எட்டியது. 

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?