Advertisement


அர்ஜென்டினா ‘திரில்’ வெற்றி

ஜூன் 27, 2018.
 Comments [1]  
 


World Cup 2018 Messi Argentina scrape into last 16 goal
 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ‘ஆண்டவன் எங்களுடன் உள்ளார் எனத் தெரியும். அவர் எங்களை கைவிட்டு விட மாட்டார் என நம்பினோம்,’ என, வெற்றி பூரிப்பில் கூறினார் கேப்டன் மெஸ்சி. மிகவும் எதிர்பார்த்த உலக கோப்பை லீக் போட்டியில் இவரும் ரோஜோவும் அசத்தல் கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி, நைஜீரியாவை 2–1 என வீழ்த்தியது. இதன் மூலம் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு முன்னேறியது.

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ‘டி’ பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் மெஸ்சி தலைமையிலான  அர்ஜென்டினா அணி, கட்டாய வெற்றியை எதிர்நோக்கி நைஜீரியாவை சந்தித்தது.

மெஸ்சி கோ...ல்

ஆரம்பத்திலேயே மெர்சலான(மிரட்டலான) ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மெஸ்சி. போட்டியின் 14வது நிமிடம் மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்த பனேகா, பந்தை மெஸ்சிக்கு கொடுத்தார். இதை தனது இடது தொடையில் வாங்கினார் மெஸ்சி. பறிக்க வந்த ஒமேருவோவை ஏமாற்றிய மெஸ்சி, மின்னல் வேகத்தில் வலது காலால் கோல் அடிக்க, அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அர்ஜென்டினா அணி தனது கடைசி 26 உலக கோப்பை போட்டிகளில், முதல் பாதியில் முன்னிலை பெற்ற (1–0) பிறகு தோற்றது இல்லை.

இந்த நம்பிக்கையுடன் இரண்டாவது பாதியில் களமிறங்கியது. 51வது நிமிடம் மஸ்செரானோ செய்த ‘பவுல்’ காரணமாக நைஜீரிய அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இதில் மோசஸ் கோல் அடிக்க ஸ்கோர் 1–1 என சமன் ஆனது. இதில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று என்ற நிலையில் அர்ஜென்டினாவும், ‘டிரா’ செய்தால் போதும் என நைஜீரியாவும் போராடின.

நேரம் செல்லச் செல்ல அர்ஜென்டினா ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். கடைசி நேரங்களில் பந்து முழுவதும் அர்ஜென்டினா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இருப்பினும் நைஜீரியாவின் பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை.

போட்டி முடிய 4 நிமிடம் இருந்த போது ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது. மெர்காடோ அடித்த பந்தை நைஜீரியா கோல் ஏரியாவில் இருந்து பெற்றார் ரோஜோ. பந்து தரையில் படும் முன்னரே தனது காலால் அதே வேகத்தில் திருப்பி அடித்து கோலாக மாற்ற, மைதானம் உற்சாகத்தில் மிதந்தது.

பிரான்ஸ் மோதல்

கடந்த 2014 தொடரின் கடைசி லீக் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக வெற்றி கோல் அடித்த ரோஜோ, மீண்டும் ஒருமுறை சாதித்தார். அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்பிரிவில் 5 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்த இந்த அணி, ‘ரவுண்டு–16’ சுற்றில் பிரான்சை (ஜூன் 30) சந்திக்கிறது.

662 *

கடந்த 2014 ல் மெஸ்சி கோல் (நைஜீரியா) அடித்தார். இதன் பின் உலக கோப்பை தொடரில் 662 நிமிடங்கள் களத்தில் இருந்த இவர், நேற்று தான் மீண்டும் கோல் அடித்தார்.

ஏமாற்றிய பூனை 

ரஷ்யா உலக கோப்பை தொடரில் ‘அக்கிலெஸ்’ என்ற பூனை போட்டியின் வெற்றி தோல்விகளை கணித்தது. முதல் போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை வெல்லும், அடுத்து எகிப்துடன் வெற்றி பெறும் என சரியாக சொன்னது. அர்ஜென்டினா போட்டிக்கு முன், நைஜீரியா வெல்லும் என கணித்தது தவறாகிப் போனது.

30 வயது, 189 நாட்கள் 

அர்ஜென்டினா, நைஜீரிய அணி வீரர்களின் சராசரி வயது 30, நாட்கள் 189 ஆக இருந்தது. உலக கோப்பை வரலாற்றில் அதிக வயது சராசரி கொண்ட வீரர்கள் மோதிய போட்டியாக இது அமைந்தது.

அர்ப்பணம் 

வெற்றி கோல் அடித்த மார்கஸ் ரோஜோ கூறுகையில்,‘‘ எப்போதும் இல்லாத வகையில் எங்கள் அர்ஜென்டினா அணி ஒருங்கிணைந்து உள்ளது. நைஜீரிய அணிக்கு எதிராக கோல் அடித்ததை எனது குடும்பத்தினர் மற்றும் அணிக்கு சமர்ப்பிக்கிறேன்,’’ என்றார்.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
aksar 3 weeks ago | Report abuse
Nice to see Argentina in Second round
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?