Advertisement


ரோஜர் பெடரர் ‘நம்பர்–2’

ஜூன் 25, 2018.
 Comments  
 


ATP Tennis Ranking, Roger Federer, Nadal
 

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த காலே ஓபன் ஒற்றையர் பிரிவு பைனலில் குரோஷியாவின் போர்னா கோரிக்கிடம் தோல்வியடைந்ததால் பெடரர் பின்னடைவை சந்தித்தார். இதனையடுத்து ஸ்பெயினின் ரபெல் நடால், மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் சாகேத் மைனேனி, 85 இடங்கள் முன்னேறி 362வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான யூகி பாம்ப்ரி (85வது இடம்), குன்னேஸ்வரன் (165வது), சுமித் நாகல் (239) பின்னடைவை சந்தித்தனர். ராம்குமார் ராமநாதன், 125வது இடத்தில் நீடிக்கிறார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், 93வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ரோகன் போபண்ணா (24வது இடம்), திவிஜ் சரண் (43வது), பயஸ் (67வது) பின்னடைவை சந்தித்தனர். புரவ் ராஜா, 74வது இடத்துக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 213வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹாங்காங்கில் நடந்த ஐ.டி.எப்., தொடரில் பட்டம் வென்ற கர்மான் கவுர் தண்டி, 258வது இடத்துக்கு முன்னேறினார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?