Advertisement


தங்கம் வென்றார் தீபிகா: உலக வில்வித்தையில் அபாரம்

ஜூன் 25, 2018.
 Comments [1]  
 


India Deepika Kumari wins recurve gold at Archery World Cup stage event
 

 சால்ட் லேக் சிட்டி: உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் நடந்த பெண்கள் ‘ரீகர்வ்’ பிரிவு பைனலில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிட்செல்லி கிராப்பனை சந்தித்தார். 5 செட் கொண்ட இப்போட்டியின் முதல் மூன்று செட் முடிவில் ஸ்கோர் 3–3 என சமனில் இருந்தது. அடுத்த இரு செட்டில் சுதாரித்த தீபிகா குமாரி, முழுமையாக கைப்பற்றினார். முடிவில் 7–3 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

தவிர துருக்கியில் நடக்கவுள்ள உலக கோப்பை பைனலுக்கும் தகுதி பெற்றார். இதற்கு முன் பங்கேற்ற உலக கோப்பை பைனல்களில் 2011, 2012, 2013, 2015 என நான்கு முறை வெள்ளி வென்ற தீபிகா குமாரி, இம்முறை சாதிப்பார் என நம்பப்படுகிறது. 

இதேபிரிவில் நடந்த கலப்பு இரட்டையர் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா குமாரி, அடானு தாஸ் ஜோடி சீன தைபே ஜோடியிடம் 4–5 என தோற்றது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
JagRudh 4 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் தீபிகா :)




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?