Advertisement


‘ஈசியா’ வென்றது ரஷ்யா: கோல் மழை பொழிந்து அசத்தல்

ஜூன் 14, 2018.
 Comments [1]  
 


russia soccer team
 

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரை ரஷ்ய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 5–0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை தோற்கடித்தது.

ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. மாஸ்கோவில் நடந்த முதல் லீக் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள, உலகின் ‘நம்பர்–70’ ரஷ்ய அணி, 67வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ரஷ்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ரஷ்ய அணிக்கு கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பில் அலெக்சாண்டர் கோலோவின் துாக்கி அடித்த பந்தை யுரி காஜின்ஸ்கி தலையால் முட்டி கோலடித்தார். இதன் மூலம் இத்தொடரின் முதல் கோல் அடித்தவர் என்ற பெருமை பெற்றார்.

ஆலன் காயம்

பின், 14வது நிமிடத்தில் ரஷ்யாவுக்கு கோலடிக்க கிடைத்த வாய்ப்பு தடுக்கப்பட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் ஆலன், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். இவருக்கு மாற்றாக டெனிஸ் செரிஷேவ் களமிறங்கினார். ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் சவுதி அரேபியாவுக்கு கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பு வீணானது. தொடர்ந்து அசத்திய ரஷ்ய அணிக்கு 43வது நிமிடத்தில் ரோமன் ஜோப்னின் ‘பாஸ்’ செய்த பந்தை செரிஷேவ் கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் ரஷ்ய அணி 2–0 என, முன்னிலை வகித்திருந்தது.

கோல் மழை

இரண்டாவது பாதியிலும் ரஷ்யாவின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் சமேடோவ், பந்தை ‘கோல் போஸ்ட்டுக்கு’ மேலே துாக்கி அடித்து கோலடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். பின், 71வது நிமிடத்தில் கோலோவின் துாக்கி அடித்த பந்தை ரஷ்யாவின் ஆர்டம் டிஜியுபா தலையால் முட்டி கோலடித்தார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் ரஷ்யாவின் செரிஷேவ் (90+1), கோலோவின் (90+4) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய சவுதி அரேபிய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ரஷ்ய அணி 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

5

நேற்று ரஷ்ய வீரர் காஜின்ஸ்கி, 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது, உலக கோப்பை துவக்க போட்டியில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் வரிசையில் 5வது இடம் பிடித்தது. பிரேசிலின் சீசர் சாம்பயோ (5வது நிமிடம், எதிர்–ஸ்காட்லாந்து, 1998), சுவிட்சர்லாந்தின் ரால்ப் (6வது, சிலி, 1962), ஜெர்மனியின் பிலிப் லாம் (6வது, கோஸ்டாரிகா, 2006), ‘சேம்சைடு கோல் அடித்த குரோஷியாவின் மார்செலோ (11வது, 2004, பிரேசில்) முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

15

முதல் உலக கோப்பை தொடர் 1930ல் உருகுவேயில் நடந்தது. அன்று முதல் நேற்று வரையில் தொடரை நடத்திய அணிகள் பங்கேற்ற தங்களது முதல் போட்டிகளில் தோற்றது கிடையாது. மொத்தம் நடந்த 22 போட்டிகளில் 15 வெற்றி கிடைத்தன. 7 போட்டி ‘டிரா’ ஆனது.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?