Advertisement


சாதிப்பாரா ரொனால்டோ

ஜூன் 14, 2018.
 Comments  
 


Cristiano Ronaldo portugal football
 

சோச்சி: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

ரஷ்யாவில் 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இன்று சோச்சியில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

போர்ச்சுகல் அணி என்றாலே கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் நினைவுக்கு வருவார். ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக எண்ணற்ற கோப்பையை வசமாக்க உதவி உள்ளார். ஆனால், போர்ச்சுகல் அணிக்காக உலக கோப்பையில் ஜொலிக்க தவறுகிறார். இதுவரை, 3 தொடரில், 13 போட்டியில் 3 கோல் மட்டுமே அடித்துள்ளார்.

கடைசி தொடர்

தனது 33வது வயதில் களமிறங்கும் ரொனால்டோவுக்கு இது கடைசி உலக கோப்பை தொடராக இருக்க வாய்ப்பு அதிகம். இதனால், போர்ச்சுகல் அணிக்கு முதல் பட்டம் வென்று தர முயற்சிக்கலாம். இளம் வீரர்களான கான்காலோ, பெர்னார்டோ, ஜெல்சன் உள்ளிட்டோர் இருப்பது பலம்.

அனுபவ கூட்டணி

ஸ்பெயின் அணியை பொறுத்தவரை கடந்த 2010ல் கோப்பை வென்றது. இவர்களின் பலமே அனுபவம்தான். ஜெரார்டு பிக்கே (31 வயது), ரமோஸ் (32), இனியஸ்டா (34) என கைதேர்ந்தவர்கள் இருப்பதால், எளிதாக வெற்றியை விட்டுத்தர வாய்ப்பில்லை. அதே நேரம், போட்டி துவங்கும் ஒரு நாளுக்கு முன், திடீரென பயிற்சியாளரை  நீக்கியது நெருக்கடியை தரலாம். புதிய பயிற்சியாளரின் வியூகம், வீரர்களை களமிறக்கும் திட்டம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றம் கைகொடுக்குமா எனத்தெரியவில்லை. ஐரோப்பாவின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் விறுவிறுப்பான ஆட்டத்தை ரசிகர்கள் காணலாம்.

இதுவரை...

சர்வதேச அளவில் இரு அணிகளும் இதுவரை 36 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் ஸ்பெயின் 17, போர்ச்சுகல் 6 போட்டியில் வென்றுள்ளன. 13 போட்டி ‘டிரா’ ஆனது. உலக கோப்பை அரங்கில் ஒரு முறை மட்டுமே (தென் ஆப்ரிக்கா, 2010) சந்தித்துள்ளன. இதில் ஸ்பெயின் 1–0 என வெற்றி பெற்றது.

பயிற்சியாளர் நீக்கம்

ஸ்பெயின் அணி பயிற்சியாளராக இருந்தவர் ஜூலன் லோப்டிகுய், 51. கடந்த 2016ல் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். உலக கோப்பை தொடருக்கு வீரர்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில், அணி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், ரியல் மாட்ரிட் கிளப் அணி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற காரணத்தினால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப்பதில் பெர்னான்டோ ஹிரோ பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?