Advertisement


உலக கோப்பை: கோலாகல துவக்கம்

ஜூன் 14, 2018.
 Comments  
 


Aida Garifullina
 

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நேற்று கோலாகலமாக துவங்கியது. ரஷ்ய அதிபர் புடின், ‘பிபா’ தலைவர் இன்பான்டினோ பங்கேற்றனர்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (பிபா) உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இதன் 21 வது தொடர் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நேற்று துவங்கியது. லுஜ்னிகி மைதானத்தில் துவக்கவிழா நடந்தது.

முதலில் ஸ்பெயினின் இகர் கேசிலாஸ் உலக கோப்பையை மைதானத்துக்குள் எடுத்து வந்து அறிமுகம் செய்தார். இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் துவங்கியது. 80,000 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். பிரேசிலின் ரொனால்டோ மைதானத்துக்கு முதல் நபராக வந்தார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பிரபல பாடகர் ராபியே வில்லியம்ஸ், மைதானத்தில் இருந்த ராட்சத வடிவிலான கால்பந்து மேடையில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ரொனால்டோ ஆட்டம்

ரஷ்ய பாடகி அய்டா கரிபுல்லினா, பறவை போல வந்து, ராபியேவுடன் இணைந்து பாடினார். பிறகு உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 32 அணிகளின் தேசிய கொடிகள் மைதானத்துக்குள் கொண்டு வரப்பட்டன. தொடரின் அதிகாரப்பூர்வ துாதர், பிரபல மாடல் அழகி விக்டோரியா லோபிரிவா கால்பந்தை கொண்டு வந்தார். ரொனால்டோ, அதிகாரப்பூர்வ சின்னம் ‘ஜபிவாகா’ ஓநாய் வேடம் அணிந்தவருடன் இணைந்து கால்பந்து விளையாடினார். அடுத்து பெரியளவிலான கால்பந்தின் மீது நின்ற ஒருவர், ஐந்து கால்பந்துகளை மேல் நோக்கி எறிந்து மாறி மாறி பிடித்து ‘ஜக்லிங்’ செய்தது ரசிகர்களை கவர்ந்தது.

அதிபர் மகிழ்ச்சி

பிறகு ரஷ்ய அதிபர் புடின், உலக கோப்பை கால்பந்து தொடரை முறைப்படி துவக்கி வைத்தார். அவர் கூறுகையில்,‘‘ ரஷ்யாவில் அதிகாரப்பூர்வ முதல் கால்பந்து போட்டி 1897ல் நடந்தது. அன்று முதல் இன்று வரையிலும் கால்பந்து இம்மண்ணில் அதிகம் நேசிக்கப்படுகிறது. ரஷ்யா எல்லோருக்கும் நட்பு நாடு. இங்கு வந்துள்ள அனைவருக்கும் சிறப்பான விருந்தோம்பல் காத்திருக்கிறது. கால்பந்து அனைவரையும் ஒரு அணியாக இணைத்துள்ளது்,’’ என்றார்.

அடுத்து வந்த பிபா கால்பந்து தலைவர் கியானி இன்பான்டினோ, எல்லோருக்கும் தட்டுத்தடுமாறி பல மொழிகளில் ‘ஹலோ’ சொல்ல முயற்சித்தார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?