Advertisement


ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை

ஜூன் 14, 2018.
 Comments  
 


soccer  russia women
 

மாஸ்கோ: ‘‘உலக கோப்பை தொடரைக் காண வரும் வேறு நாட்டு ரசிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது,’’ என ரஷ்யாவின் மூத்த எம்.பி., டமாரா, 70, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1980ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒலிம்பிக் நடந்தது. இதைக் காண வந்த பல்வேறு நாட்டு ரசிகர்களுடன் ரஷ்ய பெண்கள் படுக்கையை பகிர்ந்து கொண்டனர். ஒலிம்பிக் முடிந்து அவரவர் தங்களது நாட்டுக்கு திரும்பினர். ரஷ்ய பெண்கள் பலர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தது. இதனால் பலர் தந்தையில்லாமல் தவித்தனர்.

இம்முறை 11 நகரங்களில் நடக்கும் போட்டிகளை காண, உலகின் பல நாடுகளில் இருந்து பத்து லட்சம் பேர் ரஷ்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் தவறு நடக்கக் கூடாது என டமாரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,‘‘ கடந்த காலத்தை மறக்கக் கூடாது. இளம் பெண்கள் பலரை சந்திக்கலாம். பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைக்கு சென்று விடக் கூடாது. நம் இன மக்களுக்குள் என்றால் நல்லது. மாறாக வேறு நாட்டவர்களுடன் என்றால் அது மோசமானது,’’ என்றார். 

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?