Advertisement


துணிச்சலாக விலகிய சவுமியா

ஜூன் 14, 2018.
 Comments  
 


soumya swaminathan
 

புதுடில்லி: தலையை துணியால் மறைக்க வேண்டும் என்ற விதிமுறை காரணமாக ஈரானில் நடக்கவுள்ள ஆசிய செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் விலகினார்.

ஈரானில், அணிகளுக்கு இடையிலான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூலை 26 முதல் ஆக. 4 வரை நடக்கவுள்ளது. ஈரானில், பொது இடங்களில் பெண்கள் ‘பர்தா’ அல்லது தலையை துணியால் மறைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், இந்திய கிராண்ட் மாஸ்டர் சவுமியா சுவாமிநாதன், 29, இத்தொடரில் இருந்து விலகினார்.

இதுகுறித்து சவுமியா, தனது ‘முகநுாலில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘கட்டாயப்படுத்தி தலையை துணியால் மூடுவதையோ அல்லது ‘பர்தா’ அணிவதையோ விரும்பவில்லை. இது, அடிப்படை மனித உரிமையை மீறும் செயல். தவிர இது, எனது கருத்து சுதந்திரம், எண்ணம், மனசாட்சி மற்றும் மதத்திற்கு எதிராக உள்ளது. விளையாட்டில், மதத்தை புகுத்த விருப்பமில்லை. இதனால் இத்தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்,’’ எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஈரானில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இதே காரணத்திற்காக இந்திய வீராங்கனை ஹீனா சித்து விலகினார்.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?